முத்தம் கொடுக்க மாட்டாங்களாம், அப்படி மட்டும் நடிக்கலாமோ?: நடிகையை விளாசும் கோலிவுட்
சென்னை: திறமையான நடிகை ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்து விமர்சிக்கப்படுகிறது.
நன்றாக படித்த புத்திசாலி பெண் அந்த நடிகை. அறிவும், அழகும் ஒன்று சேர இருக்கும் அவர் தன்னை தேடி வரும் பட வாய்ப்பை எல்லாம் ஏற்பது இல்லை. தனக்கு எது பொருந்துமோ அந்த கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்கிறார்.
முன்னணி இயக்குநர் படத்தில் நடிக்க அழைத்தாலும் கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்றால் வேறு ஆளை பாருங்க என்கிறார்.

திமிர்
நடிகை இப்படி பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்வது திரையுலகினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நடிகைக்கு தலைக்கனம், திமிர் என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் திட்டுகிறார்கள். இது போதாது என்று நடிகை ஒரு படத்தில் நடிக்க இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார். அதாவது கவர்ச்சியாக உடை அணிய மாட்டேன், முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பது தான் அந்த நிபந்தனைகள்.

விமர்சனம்
அந்த நடிகை அக்கட தேசத்தில் ஒரு வில்லங்கமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த கோலிவுட்காரர்களோ, பெரிய இவுக மாதிரி பேசுது அந்த பொண்ணு, இந்த கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கலாமோ என்று விமர்சிக்கிறார்கள்.

ஃப்ரீயா விடு
நடிகை தன்னை பற்றி பலரும் பலவிதமாக தொடர்ந்து விமர்சிப்பது குறித்து அறிந்தும் அதை கண்டுகொள்வது இல்லை. அதனால் தான் அவரை விமர்சிப்பவர்கள் கடுப்பாகி அவரை பற்றி மேலும் தப்புத் தப்பாக பேசுகிறார்கள். அதற்கும் நடிகை முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. என்ன வேண்டுமானாலும் பேசிக்கோங்க, இந்த தொழில் இல்லை என்றால் எனக்கு படிப்பு கை கொடுக்கும். வாய்ப்பு வரும் வரை படங்களில் நடிப்பேன். வராவிட்டால் படித்த படிப்புக்கு வேலை பார்க்க சென்றுவிடுவேன் என்கிறார்.

சினிமா
நடிகையின் தைரியம், தெளிவு பலருக்கும் பிடிக்கவில்லை. அவருடன் மோத முடியாமல் அவரின் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகையோ தனது நடிப்பால் மட்டுமே அவர்களுக்கு பதில் அளித்து வருகிறார். ஆனால் அண்மையில் அவர் நடித்த படத்தை பார்த்தவர்கள் வேண்டாம்மா, இனி இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்காதீர்கள் என்றார்கள்.


Click it and Unblock the Notifications











