»   »  இந்த நடிகைக்கு கதை சொல்வதற்குள் கண்ணை கட்டுதே: புலம்பும் இயக்குனர்கள்

இந்த நடிகைக்கு கதை சொல்வதற்குள் கண்ணை கட்டுதே: புலம்பும் இயக்குனர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குத்துச் சண்டை நடிகையின் தந்தையிடம் கதை சொல்லி புரிய வைத்து ஓகே வாங்குவதற்குள் தமிழ் இயக்குனர்களுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வருகிறதாம்.

குத்துச் சண்டை நடிகை அவர் சார்ந்த விளையாட்டுத் துறையை பற்றிய படம் மூலம் பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

தற்போது அவர் நடன இயக்குனர் ஹீரோவுடன் சேர்ந்து ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்தாலும் நடிப்பிலும் திறமைசாலியாக இருக்கும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

அங்கு தான் ஒரு சிக்கல். அம்மணி கதையை கேட்க மாட்டாராம். அவரது தந்தை கதையை கேட்டு ஓகே சொன்னால் அவர் நடிப்பாராம். இதில் என்ன சிக்கல் என்றால் அம்மணியின் தந்தைக்கு இந்தி மட்டும் தான் தெரியுமாம்.

நம் தமிழ் இயக்குனர்களுக்கு அவருக்கு கதையை சொல்லி புரிய வைப்பதற்குள் கண்ணை கட்டிக் கொண்டு வருதாம்.

English summary
Kollywood directors are finding it extremely difficult to tell story to a young actress's father.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos