காதல் விவகாரம்..பறிபோன படவாய்ப்பு.. தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்ட நடிகை!

சென்னை : பட வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வரும் நடிகைக்கு, வீடு தேடி வந்த வாய்ப்பு காதல் விவகாரத்தால் பறிபோய் உள்ளது.

இதை நினைத்து சிரிப்பதா?அழுவதா? என தெரியாமல் அந்த நடிகை புலம்பி வருகிறார்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, பழையபடி அதே கெத்தை மெயின்டன் செய்து வருகிறார்.

விவகாரமான படம்

விவகாரமான படம்

வெள்ளாவி வெச்சு வெளுத்தது போல பளபளபனு இருக்கும் அந்த பால் நிற நடிகை அறிமுகமானதே விவகாரமான கதையில். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ஆரம்பத்தில் அந்த பெயரை எடுத்துவிட்டார். பெயரை எடுத்த நடிகை அடுத்ததாக ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நடித்தார். அந்த படம் வெற்றி பெற்ற பால் நிற நடிகைக்கு சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

இதையடுத்து, குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். முதல் படத்தில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். இதையடுத்து, காதலில் விழுந்த பால் நிற நடிகை நடிப்புக்கு டாடா கட்டிவிட்டு திருமணமாகி செட்டிலானார்.

பெயரை கெடுத்துக்கொண்டார்

பெயரை கெடுத்துக்கொண்டார்

திருமண வாழ்க்கை பாதியில் கசந்து போனதால் மீண்டும், சினிமாவில் நடிக்க வந்து ஒரு சில பாடங்களில் நடித்தார். வந்ததுமே விவகாரமான கதையில் ஏடா கூடமாக நடித்து மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டார். இதனால், பட வாய்ப்பு இல்லாமல் ஆண் நண்பர்களும் அவுட்டிங், நைட் பார்ட்டி என பொழுதை கழித்து கொஞ்சநஞ்சம் இருந்த பெயரையும் கெடுத்துக்கொண்டார்.

தயாரிப்பாளரானார்

தயாரிப்பாளரானார்

பட வாய்ப்புக்காக எவ்வளவோ தேடி அலைந்தும் படவாய்ப்பு இல்லாததால், என்ன செய்வது என்று திகைத்து நின்ற பால் நிற நடிகை தானே படம் தயாரிக்கிறேன் என்று ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டார். அந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற மக்களிடையே இவருக்கு பெயர் பெற்று வந்தது.

கம்பியை நீட்டிய தயாரிப்பாளர்

கம்பியை நீட்டிய தயாரிப்பாளர்

இதையடுத்து, தயாரிப்பாளர் ஒருவர் பால் நிற நடிகையை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய வந்துள்ளார். அந்த நேரத்தில் பால் நிற நடிகையின் காதல் விவகாரம் வெளியே வந்து பிரச்சனை நீதிமன்றம் வரை போக, பயந்து போன தயாரிப்பாளர் ஆளைவிடுடா சாமி என கம்பியை நீட்டி உள்ளார். காதல் விவகாரத்தால் பட வாய்ப்பு பறிபோனதை நினைத்து அந்த நடிகை புலம்பி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X