வாரிசு நடிகரை வைத்து படம் எடுக்கிறாரே: இந்த இயக்குனருக்கு கிறுக்கு புடுச்சிருக்கா?
Recommended Video

சென்னை: இந்த பையனுக்கு கிறுக்கு புடுச்சிருக்கா என்று தான் இளம் இயக்குனர் ஒருவரை பார்த்து கோலிவுட்காரர்கள் கேட்கிறார்கள்.
வாரிசு நடிகரை இயக்கவிருக்கும் இளம் இயக்குனரை பார்த்து கோலிவுட்காரர்கள் பாவப்படுகிறார்கள். மலைப்பகுதியை சேர்ந்த இளம் இயக்குனரின் முதல் படமே சூப்பர் ஹிட்.
அந்த படத்தை பார்த்துவிட்டு அவரை புகழாதவர்களே கிடையாது.

இயக்குனர்
தன் முதல் படத்தில் நடிக்குமாறு இயக்குனர் பெரிய நடிகர் ஒருவரை அணுக அவரோ முதலில் போய் சினிமாவை கற்றுக் கொண்டு வா என்று அனுப்பினார். அவர் கூட அந்த படம் ஹிட்டானதை பார்த்து விட்டு ஃபீல் பண்ணியிருப்பார்.

பிரச்சனை
இளம் இயக்குனரின் இரண்டாவது படம் எடுத்து முடித்தும் ரிலீஸாகாமல் பிரச்சனையில் உள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளரான பீட்டர் இயக்குனரால் தான் பிரச்சனை எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது.

படம்
இளம் இயக்குனர் தனது மூன்றாவது படத்தை வாரிசு நடிகர் ஒருவரை வைத்து இயக்க உள்ளார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை கதறவிட்ட அந்த நடிகர் தற்போது திருந்திவிட்டதாக கூறுகிறார்.

தொல்லை
அந்த நடிகர் வேண்டாம். அவர் படப்பிடிப்புக்கு சரியாக வர மாட்டார். இரண்டாவது படமே பிரச்சனையில் உள்ளது. இந்நிலையில் இந்த நடிகரை இயக்கினால் உங்களின் கெரியர் காலி என்று கோலிவுட்காரர்கள் இயக்குனரை பார்த்து பாவப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











