கர்ப்பமாகி கலைத்தும் திருந்தாத நடிகையின் அம்மா.. நடிகரை விடமாட்டேனு அழுகிறாராம்.. சங்கடத்தில் நடிகை

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய கிசுகிசுக்களில் ஒன்று நடிகர் மூலம் நடிகையின் தாய் கர்ப்பமானதும் பிறகு அதை கலைத்ததும்தான். விஷயம் தெரிந்து நடிகருக்கும், தன்னுடைய தாய்க்கும் செம ரெய்டு விட்டார் நடிகை. சூழல் இப்படி இருக்க நடிகரை மறக்க முடியாமல் தினமும் அழுது புலம்புகிறாராம் நடிகையின் தாய். இதனால் நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாராம்.

கோலிவுட்டில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த அவர்; பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் என்றே அறியப்படுபவர். ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்துதான் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.கிடைத்த இடத்தை தக்க வைக்கவும் தரமாக உழைத்தார். அதன் காரணமாக டாப் 10 நடிகர்களுக்குள் ஒருவராக வந்தார் அவர். பல விருதுகளையும் தட்டி தூக்கினார். ஆனால் வளர்ந்த பிறகு தன்னுடைய பல ஆசைகளை தீர்த்துக்கொண்டாராம்.

Kollywood Gossip Actor s Alleged Affair With Actress and Her Mother Sparks Buzz
Photo Credit:

பல நடிகைகள்: சினிமாவுக்குள் வந்த புதிதில் தன்னைவிட ரொம்பவே சீனியரான ஒரு நடிகையுடன் நெருக்கமான உறவில் இருந்தார். நடிகரின் மனைவி தலையிட்டதால் அந்த உறவு எந்த பிரச்னையும் இல்லாமல் முடிந்தது. இருப்பினும் ருசி கண்ட பூனை சும்மா இருக்காது என்பது போன்று அடுத்தடுத்து சில நடிகைகளை தன் வலையில் விழ வைத்தார். ஆனால் அந்த உறவுகள் எல்லாம் ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்தால் அத்தோடு முடிந்துவிட்டது. இதனால் நடிகரின் வீட்டில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள்.

Also Read
நடிகையின் அம்மாவை கர்ப்பமாக்கிய போதை நடிகர்?.. ஆத்தாடி இது என்னங்க புது கூத்தாக இருக்கு
நடிகையின் அம்மாவை கர்ப்பமாக்கிய போதை நடிகர்?.. ஆத்தாடி இது என்னங்க புது கூத்தாக இருக்கு

இரண்டு பேரும் வலையில்: இப்படிப்பட்ட சூழலில்தான் இப்போதும் டாப்பில் இருக்கும் நடிகை ஒருவருடன் பல வருடங்களாக பழக்கம் இருந்தது. ஆனால் அந்த நடிகையின் ரூட் இப்போது வேறு ஒருவர் பக்கம் சென்றுவிட்டது. அதனால் இந்த நடிகருடனான பழக்கத்தை முறித்துக்கொண்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நடந்ததே வேறு. அதாவது நடிகையுடன் கட்டில் உறவில் இருந்த நடிகர்; அவருக்கு தெரியாமலேயே நடிகையின் தாயையும் தன்னுடைய வலையில் விழ வைத்தாராம்.

கர்ப்பமான அம்மா: அதன் பலனாக நடிகையின் அம்மாவே கர்ப்பமாகிவிட்டாராம். அந்த கருவை யாருக்கும் தெரியாமல் கலைத்துவிட்டாலும்; தான் கரு கலைத்த மருத்துவரிடமே தன்னுடைய அம்மாவும் சென்றதன் விளைவாக; அந்த செய்தி நடிகையின் காதுகளுக்கு வந்துவிட்டது. உடனே நடிகரை லெஃப்ட் ரைட் வாங்கி உறவை முறித்தாராம். மேலும் தாயிடமும், 'இனிமேல் நீங்கள் அந்த நபர் பக்கமே திரும்பி பார்க்கக்கூடாது' என கண்டிஷன் வைத்தாராம்.

மாறாத அம்மா: முதலில் நடிகையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி இருந்த தாயார்; நாட்கள் செல்ல செல்ல நடிகரின் நினைவில் துடிதுடித்து போனாராம். இதனால் தன் மகளுக்கு தெரியாமல் நடிகரை சந்திப்பது, ஃபோனில் பேசுவது என ஜாலியாக இருந்திருக்கிறார். ஆனால் இந்த விஷயமும் நடிகையின் காதுகளுக்கு வந்துவிட; தாயிடம் செம கோபமாக பேசியிருக்கிறார். அப்போது, 'என்னால் நடிகரை மறக்க முடியவில்லை. நாங்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என இருக்கிறோம்' என சொல்ல; அப்படி மட்டும் நடந்தால் தன் மானம் மட்டுமில்லை; கரியரும் போய்விடும் என பயந்த நடிகை; நடிகருக்கு ஃபோன் செய்து, இனிமேல் இது தொடர்ந்தால் நான் போலீஸில் புகார் கொடுத்துவிடுவேன் என சொல்ல; நடிகரும் ஆளை விடுங்க ப்பா என்று ஒதுங்கிவிட்டாராம். நடிகையின் தாய்தான் இப்போது சோகத்தின் உச்சத்தில் இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X