நடிகையை இரவில் வீட்டுக்கு கூட்டி சென்ற நடிகர்?.. மகனிடம் சிக்கிய கூத்து.. புதுசு புதுசா கிளம்புதே
சென்னை: கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியவர் அந்த மூன்றெழுத்து நடிகர். மாஸ், க்ளாஸ் என இரண்டையும் கலந்துகட்டி தனது நடிப்பில் கொடுக்கும் அந்த நடிகர்தான் இப்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதேசமயம் அவரை சுற்றி பெண்கள் பஞ்சாயத்தும் பல வருடங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அவரைப் பற்றிய புது பஞ்சாயத்து கிளம்பியிருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்திருக்கிறார்கள், வரவிருக்கிறார்கள். இதுவரை வந்திருக்கும் நடிகர்களில் சிலருக்கு மட்டும்தான் தங்கள் ஊண், உயிரை கொடுக்கவும் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த நடிகர்களில் இந்த மூன்றெழுத்து நடிகர் தவிர்க்கவே முடியாதவர். திரைத்துறையில் நுழைந்த புதிதில் அவரை விமர்சிக்காத வாய்களே இல்லை. இப்போதோ நிலைமை தலைகீழ். அவரை புகழாத, அவரது துதி பாடாத வாய்களே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

மாஸ் ப்ளஸ் க்ளாஸ்: ஒரு நடிகர் ஒன்று மாஸாக நடிப்பார் இல்லை க்ளாஸாக நடிப்பார். இவரோ இரண்டையும் கலந்து நடிப்பவர். இந்த நடிகரின் சின்ன சின்ன மேனரிசங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ரசிக்க வைக்கக்கூடியவை. அந்த அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனியான ராஜபாட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். முக்கியமாக இவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக சில சமயங்களில் அடி வாங்கினாலும் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்துவிடும்.
தொடர் பஞ்சாயத்து: கரியரின் ஆரம்பத்தில் கிளாமர் காட்சிகள் படங்களில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் நடிகர். அதன் காரணமாக சினிமாவுக்குள் நுழைந்த சில காலங்களிலேயே சில நடிகைகளுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். அந்த கிசுகிசுவையெல்லாம் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை; மாறாக தனக்கு கிடைத்த ஃப்ரீ பப்ளிசிட்டியாகவே பார்த்தார். ஆனால் வளர்ந்த பிறகும் அந்த கிசுகிசு அவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பது சோகம்.
லேட்டஸ்ட் பிரச்னை: பல பிரச்னைகளை நடிகர் சந்தித்திருக்கிறார். ஆனால் பெண்கள் விஷயத்தில் குறிப்பாக ஒரு நடிகையிடம் மூன்றெழுத்து நடிகர் அடிக்ட் ஆகிவிட்டார் என்றுதான் கடந்த சில வருடங்களாக பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெறும் வாய்க்கு அவல் போட்டதுபோல்தான் நடிகர் மற்றும் அந்த நடிகையின் செயல்பாடுகளும் இருந்தன. பிரச்னை முற்றிப்பொனதை அடுத்து இருவரும் சில வருடங்கள் சேர்ந்து நடிக்காமல் இருந்தனர். பிறகு மீண்டும் நடித்ததால் பிரச்னை ஆரம்பித்திருக்கிறதாம்.
மகனிடம் சிக்கிய நடிகர்: நடிகையுடன் நடிகர் மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருப்பதால் வீட்டுக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள். தந்தை, தாய், மனைவி ஆகிய மூன்று பேர் சொல்லியும் அந்த நடிகையை விடமாட்டேன் என்கிறாராம். இந்தப் பிரச்னையால் மகனும் தனது தந்தையிடம் முறுக்கிக்கொண்டார். சூழல் இப்படி இருக்க ஒருமுறை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஒரு இரவு நேரத்தில் நடிகையை வீட்டுக்கு அழைத்து சென்றாராம் நடிகர்.
அப்போது அவர் எதிர்பார்க்காத வகையில் வெளிநாட்டில் இருந்த மகன் வீட்டுக்கு வந்தாராம். கதவை திறந்து பார்த்த மகனுக்கு அதிர்ச்சி தரும் விதமாக நடிகை வீட்டுக்குள் அங்கலாய்த்துக்கொண்டிருந்தாராம். இதனால் டென்ஷனான மகன் தனது தந்தையிடம், நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. இவங்களுக்கு இந்த நேரத்துல இங்க என்ன வேலை என்று கேட்டு வைக்க; உச்சக்கட்ட கோபமான நடிகர், இது என் வீடு இங்க யாரை வேண்டுமானாலும் நான் கூட்டிவருவேன் என்று கத்தி சொல்லிவிட்டாராம். இதனால் அப்செட்டான மகன் இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளிநாடு பறந்துவிட்டாராம். இதனால் நடிகரின் குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











