ரகசிய திருமணம்..இயக்குநரின் கட்டுப்பாட்டில் நடிகை..தெலுங்கு நடிகையால் வந்த குழப்பம்!
சென்னை : காதல் எப்போ வரும் எப்படி வரும் என்று தெரியாது. ஆனால், நேரம் காலம் தெரியாமல் வந்து பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.
அப்படி எக்கு தப்பான நேரத்தில் ஒரு நடிகைக்கு காதல் வர, அந்த நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிபோய் இருக்கிறாராம்.
தனக்கு வந்த காதல் ஜுரம் குறித்து தெலுங்கு நடிகையிடம் மனம் விட்டு பேச, அந்த தகவலை அவர் நைசாக மீடியாவில் பற்றவைத்துள்ளார்.

பிரபல இயக்குநரின் படத்தில்
பெங்களுரை பூர்வீகமாக கொண்ட அந்த அமைதியான நடிகைக்கு நடிப்பின் மீது தீராத காதல் இருந்ததால், மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சென்னையில் குடியேறினார். கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு தேடி அலைந்த நடிகைக்கு பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும், கிடைத்த ஆஃபரை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இயக்குநருடன் காதல்
முதல் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்ததால், சிறிய ரோலில் நடித்த அந்த அமைதியான நடிகைக்கும் அடித்தடுத்த வாய்ப்புகள் வந்தன. இதையடுத்து, இளம் இயக்குநர் ஒருவர் இயக்கிய படத்தில், இந்த நடிகை கமிட்டாக இருவருக்கும் இடையே அப்போதே காதல் தீ பற்றி உள்ளது. ஆனால், இதை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து இருவரும் மறைத்து வைத்திருந்தனர்.

தெலுங்கில் படவாய்ப்புகள்
இதையடுத்து,அமைதியான நடிகைக்கு தமிழிலில் வாய்ப்பு கிடைக்காமல் போக தெலுங்கு பக்கம் சென்று ஓரிரு படத்தில் நடித்தார். அந்த படங்கள் வெற்றி பெற்றதால், அம்மணி அங்கேயே செட்டிலாகி விட்டார். தற்போது அந்த அமைதியான நடிகைக்கு கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். தனது காதல் குறித்து நெருங்கிய தோழியான தெலுங்கு நடிகையிடம் சொல்ல அந்த நடிகை தற்போது பிரச்சனையை கிளப்பி உள்ளார்.

நடிகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்
அதாவது, அமைதியான நடிகைக்கு இளம் இயக்குநருடன் ரகசிய திருமணமாகிவிட்டது என்று தெலுங்கு நடிகை மீடியாவில் குண்டை போட்டுள்ளார். மேலும் திருமணம் நடந்து ஓராண்டு ஆன போதும் இருவரும் வெளியில் சொல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறினார். பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்த அந்த இளம் இயக்குநர், நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவரை எந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கும் அனுப்புவது இல்லை என அடுக்கடுக்காக புகார் கூறியுள்ளார் அந்த தெலுங்கு நடிகை.


Click it and Unblock the Notifications











