குடும்பத்திற்கே நேரம் சரியில்ல.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட மூத்த நடிகர்.. ஆர்டர் போட்ட வாரிசு!

சென்னை: ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால், சிவனேனு இருந்தாலும், ஏதாவது ஒரு பிரச்சனை தேடி வரும் என்பார்கள். அப்படித்தான், வாரிசு நடிகரின் குடும்பத்திற்கே தற்போது நேரம் சரியில்லாமல் இருப்பதால், எது செய்தாலும் அது ஏழரையாகவே மாறிவிடுகிறது. இதனால், பெருமளவில் பாதிக்கப்படுவது வாரிசு நடிகர் என்பதால், அந்த குடும்பத்தில் யாருமே வாயை திறக்கக்கூடாது என்று ஆர்டர் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாரிசு நடிகராக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், திறமையாலும் அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து இன்று முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபலமான நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட, அந்த வாரிசு நடிகரின் அப்பாவோ இது நம்ம குடும்பத்திற்கு ஒத்து வராது வேண்டாம் என்று முரண்டு பிடித்து உள்ளார். ஆனால், வாரிசு நடிகரோ கட்டுனா அவளை தான் கட்டுவேன் என்று ஒரே ஆர்பாட்டம் செய்ய வேறு வழியில்லாமல், குடும்ப மானம் போய்விடக்கூடாது என்பதற்காக, மகன் ஆசைப்பட்ட அந்த பிரகாசமான நடிகைக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

Kollywood gossip kisu kisu

வாரிசு நடிகர்: திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அந்த பிரகாசமான நடிகை, குழந்தைகளை நன்றாக வளர்த்து வந்தார். இதனால், குடும்பம் நன்றாக சென்று கொண்டு இருந்தது. அப்போது தான், பிரகாசமான நடிகைக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, அதை கணவரிடம் சொல்லி இருக்கிறார். காதல் மனைவி மீது அதீத அன்பு கொண்ட, வாரிசு நடிகரும் அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கிவிட, அந்த பிரகாசமான நடிகை நடிக்க ஆரம்பித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நடிகைக்கு தொடர்ந்து நடிப்பதில் ஆசை வரை, அது குடும்பத்தில் பிரச்சனையாக மாறிவிட்டது. கடைசியில், கணவரிடம் உங்களுடைய திறமைக்கு நீ இங்கே இருக்கக்கூடாது, பாலிவுட் தான் சரி என ஏதேதோ சொல்லி அவரை மொத்தமாக பாலிவுட்டுக்கு அனுப்பிவிட்டார். ஆனால், அங்கே வாரிசு நடிகருக்கு வாய்ப்பு இதுவரை வரவே இல்லை.

எதுக்கு இந்த வேலை: கடந்த சில ஆண்டுகளாக வாரிசு நடிகரின் படம் எதுவும் வெளியாகாத நேரத்தில், கடந்த ஆண்டு பல மொழிகளில் வரலாற்று திரைப்படம் ஒன்று வெளியானது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் முதல் நாளே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு காரணம், அந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில், படத்தை ஓவராக புகழ்ந்து படத்தின் மீதான ஹைப்பை ஏற்றிவிட்டது தான் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், படம் கடும் விமர்சனத்திற்குள்ளானதும், கணவருக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று, பிரகாசமான நடிகை ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல, இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி விட்டது.

தற்போது வாரிசு நடிகரின் படம் ஒன்று வெளியாக இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற்றால் தான், இனி ஜெயிக்க முடியும் என தெரிந்து கொண்ட அந்த வாரிசு நடிகர். இந்த படத்திற்கு எந்தவிதமான சர்ச்சையும் வந்துவிடக்கூடாது என்று முனைப்புடன் இருக்கிறார். ஆனால், வாரிசு நடிகரின் அப்பாவோ இசைவெளியீட்டு விழாவிலேயே ஏதோ ஒரு கருத்தை சொல்லப்போக அது சர்ச்சையாகிவிட்டது. இதனால், சுதாரித்துக்கொண்ட வாரிசு நடிகர், குடும்பத்திற்கே ஒரு ஆர்டர் போட்டு இருக்கிறார். அதாவது, படம் குறித்து, என்ன மாதிரியான விமர்சனம் வந்தாலும், யாரும் அதற்கு பதிலளிக்கக்கூடாது, குறிப்பாக தனது மனைவிக்கு படம் பற்றி பேசவேக்கூடாது என்று கண்டிஷன் போட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று கசிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X