நடிகையுடன் விடாமல் தொடரும் பழைய தொடர்பு?.. இளைய நடிகரால் பெரியவர் வீட்டில் அடுத்த புகைச்சல்?
சென்னை: பம்பாய் நடிகையுடன் இளைய நடிகர் மீண்டும் தொடர்பில் இருக்க ஆரம்பித்திருப்பதால் பெரியவர் வீட்டில் அடுத்த புகைச்சல் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
வீரமான படத்தில் அறிமுகமானவர் இளைய நடிகர். ஏற்கனவே இவருக்கு முன்னதாக வீட்டிலிருந்து இரண்டு நடிகர்கள் இருந்தார்கள். அதனால் நாம் நடிப்பு பக்கம் செல்ல வேண்டாம் இயக்கம் பக்கம் செல்லலாம் என பெல் இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்தார். ஆனால் என்ன ஞானம் வந்ததோ தெரியவில்லை நடிகராக அறிமுகமாகிவிட்டார்.

முதல் படமே மெகா ஹிட்: யாருக்கும் வாய்க்காத மாதிரி நடிகருக்கு முதல் படம் அமைந்தது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி முதல் படத்திலேயே பலராலும் ரசிக்கப்பட்டார் நடிகர். அந்தப் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகம் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அவரை நடிக்க வைத்தது. இதனால் முதல் 4 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.
காதல்: சூழல் இப்படி இருக்க மூன்றாவது படத்தில் இவர் நடித்தபோது இவருக்கு ஜோடியாக பம்பாயை சேர்ந்த நடிகை நடித்தார். அந்தப் படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. படமும் ஹிட்டானது. இருவருக்கும் ஆன் கேமராவில் இருந்த கெமிஸ்ட்ரி ஆஃப் கேமராவிலும் பற்றிக்கொண்டது. இதனால் விலங்கு பெயர் கொண்ட படத்திலும் தனக்கு ஜோடியாக அந்த நடிகையை நடிக்க வைத்தார்.
வீட்டில் எதிர்ப்பு: நடிகரின் தந்தையான பெரியவரோ கலாசாரா பேர்வழி. ஏற்கனவே தனது மூத்த மகனும் வடநாட்டு பெண்ணை திருமணம் செய்ததால் அப்செட்டில் இருந்த அவர் எங்கே இளைய மகனும் அண்ணன் வழியில் சென்றுவிடுவாரோ என்று அஞ்ச ஆரம்பித்தார். அந்தப் பெண்ணை விட்டுவிடு என தொடர்ந்து வலியுறுத்தினாலும் நடிகர் கொஞ்சம் கறார் காண்பித்ததால் உடனடியாக தனது சாதியை சேர்ந்த பெண்னையே இளைய மகனுக்கு கட்டி வைத்தார்.
மீண்டும் தொடர்பு: திருமணம் ஆன பிறகு அடக்கி வாசித்துக்கொண்டிருந்த நடிகர் பம்பாய் நடிகையோடு இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டார். இதனால் வீட்டிலும் நிம்மதி பெருமூச்சு எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் நடிகரின் நடிப்பில் சமீபத்தில் ஒரு படம் வெளியானது. அதுதொடர்பாக நடிகருக்கு விழாவும் எடுக்கப்பட்டது.
ட்விஸ்ட்: இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அந்த விழாவுக்கு பம்பாய் நடிகை வந்ததுதான். நடிகை வந்தது மட்டுமில்லாமல் மேடையில் ஏறி நடிகரை ஆஹோ ஓஹோவென புகழ ஆரம்பித்தார். அந்த புகழ்ச்சி நடிகரை பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றுவிட்டதாம். இதனையடுத்து இருவரும் இப்போது அடிக்கடி சந்திக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
நடிகர் சொல்லாமல் நடிகை எப்படி வந்திருப்பார். அப்போ இன்னும் அந்த நடிகையுடன் நடிகர் தொடர்பில்தான் இருக்கிறாரா என்ற பெரிய அதிர்ச்சி எழுந்தது மட்டுமின்றி குடும்பத்தார் உச்சக்கட்ட கோபத்துக்கே சென்றுவிட்டாரக்ளாம். இருந்தாலும் நாகரீகம் கருதி அமைதியாக இருந்துவிட்டார்களாம். ஆனால் நடிகரோ இப்போது மீண்டும் அந்த நடிகையுடன் அடிக்கடி சந்திப்பு நிகழ்த்துவதும், தொலைபேசியில் பேசுவதுமாக இருப்பதால் பெரியவர் வீட்டில் புகைச்சல் ஆரம்பித்திருக்கிறதாம். ஏற்கனவே வீர பஞ்சாயத்தால் பற்றி எரிந்துகொண்டிருக்கும் வீட்டில் இந்த நடிகை பஞ்சாயத்தும் புகைய தொடங்கியிருக்கிறதாம்..


Click it and Unblock the Notifications











