பெரிய கையோடு பஞ்சாயத்து.. சக்சஸ் மிதப்பில் இயக்குநர்.. கடுப்பில் தயாரிப்பாளர்

By Staff

சென்னை: இந்த இயக்குநர் ஜனரஞ்சகமான படங்களைத் தருவதில் கெட்டிக்காரர் தான். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் எப்படியும் கல்லா கட்டி விடுகிறது என்பதால், இந்த இயக்குநர் இயக்கத்தில் படம் தயாரிக்க எந்தவிதமான தயக்கமும் காட்டாமல் தலை ஆட்டி விடுகிறார்கள். இப்படி இந்த இயக்குநரை நம்பி தயாரிக்க ஒத்துக் கொண்டு படத்தை தயாரித்து ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் கொஞ்சம் திக் திக் மனநிலையில் இருக்கிறாராம்.

அதாவது, இந்த இயக்குநர் இயக்கத்தில் தனக்கு வேண்டப்பட்ட நடிகருக்கு பக்காவான கமர்ஷியல் படம் பண்ணச் சொல்லி தயாரிப்பாளர் கேட்க, இயக்குநரும் பண்ணிடலாம் சார், ஆனால் இப்போது எங்கிட்ட இருக்கும் ஸ்கிரிப்ட்டுக்கு பட்ஜெட் அதிகம் செலவாகும் என்று கூறியுள்ளார். தயாரிப்பாளரோ, இவர் இயக்கும் படத்துக்கும், அதுவும் அவர் சொல்லும் கதைக்கு குடி முழுகிப் போகும் அளவுக்கு எல்லாம் பட்ஜெட் இருக்காது, எனவே எல்லாம் பார்த்து பண்ணிக்கலாம் வாங்க சார் என்று கூறி படத்தின் வேலைகளைத் தொடங்கி உள்ளனர்.

இப்படி இருக்கும்போது, படத்தின் சில காட்சிகளுக்கு இயக்குநர் பிரமாண்டமான முறையில் செட் போடச் சொல்லி உள்ளார், ஆனால் தயாரிப்பாளரோ, சார் சார் பணம் எதிர்பார்த்த தேதியில் கைக்கு வரவில்லை, இந்த காட்சி மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணி எடுத்துக்காங்களே என்று கூறி உள்ளார். இயக்குநரும் அப்படியா, சார்.. சரி பார்த்துக்கலாம் விடுங்க சார் என்று கூறியுள்ளார்.

Kollywood Producer Upset With Director After Big-Budget Issues and Controversial Scene Creates Fresh Trouble

முதல் பஞ்சாயத்து: அதேபோல் ஒரு காட்சியை படமாக்க சுமார் 5 ஆயிரம் பேரை தயார் செய்து கொடுக்கச் சொல்லி சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தயாரிப்பாளரை இயக்குநரே நேரடியாக அலர்ட் செய்துள்ளார். இயக்குநரும் சரிங்க சார், ஜம்முனு ஏற்பாடு செய்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

கடுப்பான இயக்குநர்: இயக்குநரும் தான் எதிர்பார்த்தபடி ஒரு 5000 பேர் இருப்பார்கள், குறைந்தது 1000 பேராவது இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். ஆனால் அன்றைய தினத்தில் இயக்குநரோடு சேர்ந்து படப்பிடிப்புத் தளத்தில், சுமார் 700 முதல் 800 பேர் வரைதான் இருந்திருப்பார்களாம். இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற இயக்குநரோ, அன்றைய தினத்தில் படப்பிடிப்பை ரத்து செய்ய, பிரச்னை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் தொடங்கிவிட்டதாம்.

நடுக்கத்தில் தயாரிப்பாளர்: இதனால் ஒரு கட்டத்தில் இயக்குநர் வெளியில் நல்ல தயாரிப்பாளருக்கு படம் பண்ணுங்க என்று அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். இப்படி இருக்கையில் படத்தின் ஒரு காட்சியில், இந்திய சினிமாவில் இருக்கும் மிகவும் பெரிய கை ஒருவரை கிண்டல் செய்யும் வகையில் சில வசனங்களை படத்தில் வைத்துவிட்டார். இப்போது அது பெரிய பிரச்னையாக மாற புகைச்சல் அதிகமாகிவிட்டது. இதனால் எப்போது பிரச்னை பூகம்பமாக வெடிக்கும் என்ற பயத்தில் தயாரிப்பாளர் இருக்கிறாராம். ஆனால் இது தொடர்பாக இயக்குநர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருக்கிறாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X