படமே ஓடல.. 35 கோடி.. 40 கோடி என வாய்க்கூசாம கேட்கிறாங்களே.. போட்டி நடிகர்களால் புலம்பும் கோலிவுட்!
சென்னை: அந்த இரு போட்டி நடிகர்களின் சமீபத்திய படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும், இளம் மாஸ் நடிகருக்கு அதிக சம்பளம் கொடுப்பதை அறிந்த நடிகர்கள் இருவருமே தங்களின் சம்பளத்தை அதிரடியாக அதிகரித்து இருப்பது கோலிவுட் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஏற்கனவே முன்னணி நடிகர்கள் எல்லாம் கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே படம் பண்ண முடியும் என்கிற அளவுக்கு 100 கோடிகளுக்கு மேல் தங்களின் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டனர்.
நல்ல கதைகளுடன் இளம் நடிகர்களையாவது அணுகலாம் என்று பார்த்தால், அவர்களும் மனசாட்சியே இல்லாமல் பல கோடிகள் கேட்பதாக புலம்பல் ஒலி கேட்க தொடங்கி உள்ளன.

நடிகைகளுக்கு குறைவு
நம்பர் நடிகையாக இருந்தாலுமே நேற்று வந்த ஹீரோ வாங்கும் சம்பளத்தை விட 4 மடங்கு குறைவாகவே வாங்கி வரும் சூழல் இப்போதும் நிலவி வருகிறது. சம்பளத்தை அதிகரிக்கவே நடிகைகள் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு சில பல மொக்கை படங்களை கொடுத்து டார்ச்சர் செய்து வருகின்றனர்.

நேற்று வந்தவருக்கு அதிகம்
தனது விடா முயற்சியால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுள்ள அந்த நடிகரின் மார்க்கெட் அனைத்து இடங்களிலும் அதிகரித்துள்ள நிலையில், 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அவருக்கு மட்டும் அவ்வளவு கொடுக்கிறாங்க, நாங்க எல்லாம் எப்போ வந்தோம், எங்கள் அனுபவம் என்ன நடிப்பு என்ன? என போட்டி நடிகர்கள் இடையே சம்பளப் போட்டி வெடித்து இருப்பதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

35 கோடி வேணும்
நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்து வந்த நிலையில், அந்த வம்பு நடிகருக்கு எங்கேயும் மார்க்கெட்டே இல்லை. ஒரே ஒரு படம் மட்டுமே ஓடிய நிலையில், சமீபத்தில் வெளியான படத்தையும் ஓடிய படமாகவே கணக்கு காட்டி தனது சம்பளத்தை 35 கோடியாக அதிகரித்துள்ளார் என அவரை புக் செய்ய சென்ற சில பிரபல தயாரிப்பாளர்களே ஃபீல் செய்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

40 கோடி கொடுத்தால் தான்
அவரை விட ஒல்லி நடிகர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்த டபுள் ஆக்ஷன் படம் அட்டு ஃபிளாப்பான நிலையிலும், உலகம் முழுவதும் நடித்து வருகிறேன். மற்ற இண்டஸ்ட்ரியில் என் கால்ஷீட் கேட்டு பலரும் காத்திருக்கின்றனர். இங்கே நீங்க 40 கொடுத்தால் யோசிக்கலாம் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி வருவதாக புலம்பல்கள் அதிகரித்துள்ளன.

விளங்கிடும்
இப்படி பழைய போட்டி நடிகர்கள் இருவரும் அதிரடியாக தங்களின் சம்பளத்தை உயர்த்திக் கேட்டு வருவதால் தான் சமீபத்தில் சில கோடிகள் கூட தாண்டாத பல இளம் நடிகர்களுக்கு பெரிய பட வாய்ப்புகள் தேடாமலே வந்த செல்வமாக வந்து குவிந்து வருவதாகவும், இவர்கள் இருவரும் இப்படி நடந்து கொள்வது அவர்களின் எதிர்காலத்தை தான் ரொம்ப பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

200 கோடி ஹிட்
100 கோடி ஹிட்டே தாண்டாத நிலையில், பாதிக்கு பாதி சம்பளம் கேட்டால் எப்படி? 200 கோடி ஹிட் ஒரு முறையாவது கொடுத்து விட்டு இந்த நடிகர்கள் தங்களின் சம்பளத்தை உயர்த்தினால் தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக தர முன் வருவார்கள். புதிதாக வந்தவர்களே அசால்ட்டாக 50, 60 கோடி ஹிட் கொடுக்கும் போது, இவர்களுக்கு ஏன் அவ்வளவு காசு கொட்டிக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் அவர்களை புக் செய்வதையே தவிர்த்து வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications











