நம்பர் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. பழைய பஞ்சாயத்து எல்லாம் ஓவராம்?.. மாப்பிள்ளை அந்த நடிகராம்
சென்னை: கோலிவுட்டில் கடந்த பல வருடங்களாக டாப்பில் இருப்பவர் அந்த நடிகை. ரசிகர்களால் ஸ்லிம் பியூட்டி, நம்பர் நடிகை என்று கொண்டாடப்படுபவர். இதுவரை சிங்கிளாக இருக்கும் அவருக்கு இடையில் விசேஷம் எல்லாம் நடக்கும் சூழல் வந்து அது நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில் சிங்கிளாக இருக்கும் நம்பர் நடிகை தனது மனதை மாற்றிக்கொண்டுவிட்டதாக ஒரு கிசுகிசு கோலிவுட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த அந்த நடிகை பல வருடங்களாக நடித்துவருகிறார். அறிமுகமான முதல் படத்திலிருந்தே தனக்கென தனி மார்க்கெட்டை பிடிக்க ஆரம்பித்த அவர்; கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் பட்டையை கிளப்பி ரவுண்டு வந்தவர். அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட அவருக்கு; கிளாமர், ஹோம்லி என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அனைத்துமே அவருக்கு செட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அசைக்க முடியவில்லை: இடையே அவருக்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டது என்னவோ உண்மைதான். இருந்தாலும் விட்டுக்கொடுக்காத அம்மணி கதைகள் கேட்பதில் முழு கவனத்தையும் செலுத்தி தன்னுடைய ரோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து நடித்தார். அந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டோ, தோல்வியோ; நடிகைக்கு பெயரும் வந்தது; அம்மணியின் கல்லா பெட்டியும் நிரம்பிக்கொண்டே இருந்தது.

கிசுகிசுக்கள்: சினிமாவில் பீக்கில் இருந்தாலே அவரை சுற்றி கிசுகிசு எழுவது வாடிக்கைதான். ஆனால் நடிகை விஷயத்தில் அது கொஞ்சம் எல்லை மீறி போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். முதலில் ஒரு நடிகரோடு சேர்த்து வைக்கப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு பேரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துவதாக எல்லாம் பேச்சுக்கள் வந்தன. ரெய்டும் நடந்தது. அதனையடுத்து அவருடனான உறவிலிருந்து வெளியே வந்த அவர்; பக்கத்து மாநிலத்து நடிகருடன் நெருக்கம் காட்டினார்.
மீண்டும் கிசுகிசு: ஆனால் அதுவும் பாதியில் முடிந்தது. பிறகு ஒருவருடன் விசேஷம் நடக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. கடைசியில் அதுவும் நடக்கவில்லை. ரிலேஷன்ஷிப் விவகாரமே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தபோதுதான் மாஸ் நடிகருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அப்போதிருந்து அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதுகுறித்து நடிகரும், நடிகையும் பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் கொடுக்கவில்லை.
மனம் மாறிய நடிகை: சூழல் இப்படி இருக்கு புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது, நடிகையின் வயது ஏறிக்கொண்டே போவதால் அவரது தாய் ரொம்பவே கவலைப்பட்டு; திருமணம் பற்றி பேசிக்கொண்டே இருந்தாராம். எனக்கு பிறகு உனக்கென்று ஒரு துணை வேண்டும் என சென்ட்டிமென்ட்டாகவெல்லாம் பேசி மனதை மாற்றிவிட்டாராம். நடிகையும் திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் உன் மனதுக்கு பிடித்த நபரை நீயே சொல் என தாய் சொல்ல; தன்னுடன் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்த நடிகர் ஒருவரை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டாராம். ஏற்கனவே அந்த நடிகரும், நடிகையும் டேட்டிங் செய்து செட் ஆகிவிட்டதாம். இப்போது நடிகரின் தரப்பிடம் நடிகையின் தாய் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டாராம். விரைவில் விசேஷ செய்தி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











