அப்பா, மகனை வளைத்துப்போட்ட சீனியர் நடிகை... சிரிப்பாய் சிரித்த கோலிவுட்!
சென்னை: சீனியர் நடிகை ஒருவர் அப்பா, மகன் இருவரையும் வளைத்த போட்ட சம்பவம் கோலிவுட்டில் சிரிப்பாய் சிரிக்கிறது.
கதாநாயகியாக அறிமுகமான இந்த நடிகையின் முதல் படம் சரியாக ஓடாததால், இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையவில்லை. இதனால், ஹீரோயின் கனவை தகர்த்துவிட்டு, அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். குணசித்திர கதாபாத்திரம் கைகொடுக்கவே தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார்.

இயக்குநருடன் நட்பு: இந்த நேரத்தில் பிரபல இயக்குநர் ஒருவருடன் நட்பு ஏற்பட அவருடன் நெருங்கி பழகினார். இதனால், இந்த சீனியர் நடிகைக்கு படவாய்ப்பு தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக குடுத்தனம் நடத்தும் அளவுக்கு இருவரும் வரம்பு மீறி பழக தொடங்கினார்கள். இந்த விவகாரம் கிசுகிசுவாக பத்திரிக்கையில் வர சுதாரித்துக்கொண்ட இயக்குநர் நைசாக நடிகையை கழட்டிவிட்டு கம்பி நீட்டிவிட்டார்.
போனால் போகட்டும் போடா: இதனால், டென்ஷனான சீனியர், போனால் போகட்டும் போடா என சினிமாவில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் இயக்குநரின் மகன் நடித்த படத்தில் சீனியர் நடிகை நடித்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட மகனுடன் சேர்ந்து ஊர் சுற்றினார். அப்பாவுடன் குடும்பம் நடத்திவிட்டு இப்போது மகனையும் வளைத்துப்போட்ட சீனியர் நடிகை குறித்து பலர் அட்வைஸ் கொடுத்தாலும் அதை மகன் நடிகர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
சிரிப்பாய் சிரித்த கோலிவுட்: இவர்கள் இருவரும் ஊர் ஊராக சுற்றுவது இயக்குநரின் காதில் விழ, மகனை அழைத்து சீனியர் நடிகை குறித்து புட்டுபுட்டு வைத்துள்ளார். மற்றவர்கள் சொன்ன போது காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்த மகன் நடிகர், தனது அப்பாவே இப்படி சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, சீனியர் நடிகையை லெப்ட் அண்ட் ரைட் விட்டு, இனிமேல் அவ்வளவு தான் என எச்சரித்துள்ளார் மகன் நடிகர். இந்த கதை எல்லாம் கேட்டு கோலிவுட் வட்டாரமே சிரிப்பாய் சிரிக்கிறது.


Click it and Unblock the Notifications











