திருமணத்துக்கே ரெடியான நடிகர்.. கடுப்பில் மனைவி செய்த காரியம்.. நடிகையின் பார்ட்டி

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய பரபரப்பு நிகழ்ந்திருக்கிறது. அதாவது மாஸ் நடிகரிடமிருந்து அவரது மனைவி விவாகரத்து கேட்டிருக்கிறார். இதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறது. இத்தனை நாட்கள் முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்து வந்த அவரது ரசிகர்கள் ஆஃப் லைனுக்கு சென்றுவிட்டார்கள். இந்நிலையில் இதற்கு பின்னணியில் நடந்த விஷயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் அவர். ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருக்கும் அந்த நடிகர் தற்போது புதிய பயணத்தையும் ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து அவருக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. அதில் முக்கியமான ஒன்று அவரது பெர்சனல் வாழ்க்கை. அதாவது மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார்கள்.

Kollywood Sensation Star Actor s Marriage Trouble Turns Into Major Divorce Controversy
Photo Credit:

மனைவி செய்த காரியம்: அதையெல்லாம் நடிகரின் ரசிகர்கள் நம்பவும் இல்லை; நடிகரை விட்டுக்கொடுக்கவும் இல்லை. மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதற்காகத்தான் இப்படியெல்லாம் கிளப்பிவிடுகிறார்கள்; எங்கள் தலைவர் அப்படிப்பட்ட ஆள் எல்லாம் இல்லை என முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்தார்கள். சூழல் இப்படி இருக்க நடிகரின் மனைவி செய்திருக்கும் காரியம் ஒன்று அந்த முட்டுக்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது.

Also Read
பாட்டு நடிகையின் வருகையால் படமே இல்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை.. குடியே கதியென இருக்காராம்?
பாட்டு நடிகையின் வருகையால் படமே இல்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை.. குடியே கதியென இருக்காராம்?

அதிரடி செயல்: அதாவது நடிகரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்.இந்த விவகாரம் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நடிகரின் மனைவி செய்திருக்கும் இந்த செயலுக்கு பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நடிகையுடனான உறவை முறித்துக்கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தாராம் மனைவியார். நடிகரும் கண்டிப்பாக முறித்துக்கொள்கிறேன் என உறுதி கொடுத்துவிட்டு; டிமிக்கி கொடுத்திருக்கிறார்.

திருமணத்துக்கு தயாரான நடிகர்?: அதுமட்டுமின்றி மனைவிக்கு தெரியாமல் நடிகையை திருமணம் செய்துகொள்வதற்கும் பிளான் போட்டுவிட்டாராம். நடிகையும் முழு ஒத்துழைப்பு கொடுத்தாராம். இந்த விஷயம் எப்படியோ மனைவிக்கு தெரியவர; இனியும் இந்த மனுஷனோடு வாழ முடியாது என்று முடிவெடுத்து நீதிமன்ற படிகள் ஏறியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி தனது மகளையும், மகனையும் பார்ப்பதற்கு வரவேகூடாது எனவும் நடிகரிடம் கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

குஷியில் நடிகை: இது ஒருபக்கம் இருக்க நடிகை பயங்கர குஷியாகிவிட்டாராம். நடிகரின் மனைவி கோர்ட்டுக்கு போன செய்தியை பார்த்துவிட்டு; எப்படியும் நடிகருக்கு விவாகரத்து கிடைத்துவிடும். நம் ரூட் க்ளியராகிவிட்டது என்று தனது தோழிகளுக்கு பார்ட்டியெல்லாம் வைத்து கலக்கிவிட்டாராம். மேலும் தனது தாயிடமும் நடிகரை திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதம் கிடைத்துவிட்டதால்; டைவர்ஸ் கிடைத்த கையோடு நடிகரை திருமணம் செய்துகொள்ளும் முடிவிலும் அம்மணி இருப்பதாக கோலிவுட் பட்சிகள் கூறுகின்றன. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X