உயிரே போனாலும் அதை மட்டும் செய்யமாட்டேன்.. கணவர் மீது நடிகைக்கு துளிக்கூட நம்பிக்கை இல்லையாம்
சென்னை: பக்கத்து மாநிலத்தை சேர்ந்த அந்த நடிகை தமிழ்நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் பெரிய சர்ச்சைகளை சந்தித்தாலும்; இப்போது அவர்கள் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக மாறியிருக்கிறார்கள். இரண்டு பேருமே சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் சூழலில்; கணவரிடம் போட்டிருக்கும் கண்டிஷனிலிருந்து பின் வாங்குவதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.
தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அவர். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலும் அனைவருக்கும் ஜோடியாக நடித்துவிட்டார். சில காதல் தோல்விகளை சந்தித்த அம்மணி; தன்னை விட பல வருடங்கள் வயதில் சிறியவரின் இயக்கத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. ஹிட்டானது மட்டுமின்றி நடிகைக்கும், இயக்குநருக்கும் இடையே காதலையும் பற்ற வைத்தது.
திருமணம் செய்துகொண்ட ஜோடி: இரண்டு பேரும் காதலில் விழுந்த பிறகு ஒரே வீட்டில் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். நீண்ட வருடங்கள் அந்த லிவிங் வாழ்க்கை போனது. ஒருகட்டத்தில் ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துகொண்டதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். நடிகை எது செய்தாலும் பெரிய சர்ச்சையை கிளப்புவதற்கே ஒரு கூட்டம் தயாராக இருக்கும். அதேபோல் ஒரு சர்ச்சையை திருமணத்திலும் கிளப்பினார்கள்.

கண்டுகொள்ளாத நடிகை: ஆனால் நடிகையும் அவரது கணவரும் அதுகுறித்து துளியும் கண்டுகொள்ளவில்லை. ஆடம்பரமாக திருமணத்தை செய்துவிட்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்கள் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். மணமுடிந்த பிறகு கணவரும், நடிகையும் திரைத்துறையில் தத்தமது வழிகளில் பிஸியாக இருக்கிறார்கள். சினிமா மட்டுமின்றி சைட் பிஸ்னெஸ்ஸும் ஏகப்பட்டது செய்கிறார்கள்.
நடிகை போட்ட கண்டிஷன்: இதற்கிடையே திருமணம் செய்துகொள்ளும்போதே கணவரிடம் அம்மணி ஒரு கண்டிஷனை போட்டாராம். அதாவது எந்தக் காலத்திலும் உனது இயக்கத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி தரக்கூடாது. கதை பிடித்திருந்தால் நானே நடிப்பேன் என்பதுதான் அது. அந்த டீல்படிதான் இத்தனை நாட்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டதாம். அதாவது சென்சேஷனல் ஹீரோவை வைத்து கணவர் இயக்கியிருக்கும் படம் விரைவில் வருகிறது. அதற்கு பிறகு யாருமே இவரது இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லையாம்.
கறார் காட்டும் நடிகை: இதனால் அப்செட்டாகி யோசித்த கணவர்; கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு ஏன் நெய்யை தேட வேண்டும் என முடிவெடுத்து, 'என்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடி' என்று சொல்ல; நடிகையோ போட்ட டீலை மறந்துவிட்டு பேசாதே; கதை பிடித்திருந்தால் நடிக்கிறேன் என சொன்னாராம். கணவரும் கதை சொன்னாராம். ஆனால் அது பிடிக்கவில்லையாம். இதில் நடித்தால் எப்படியும் தோல்விதான் கிடைக்கும் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். நீ நம்பிக்கை வைத்து நடி ஹிட்டாக்கி காண்பிக்கிறேன் என கணவர் சொல்லியும்; அம்மணிக்கு நம்பிக்கையே வரவில்லையாம்.


Click it and Unblock the Notifications











