இவ்வளவு நடந்தும் திருந்தலையா?.. நடிகை வீட்டுக்கு சென்ற நடிகர்.. அசிங்கப்படுத்திய அம்மணியின் அம்மா
சென்னை: தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாஸ் ஹீரோக்களில் அவரும் ஒருவர். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் பல முறை நூறு கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெயரை பெற்றிருக்கிறார். இத்தனை வருடங்கள் அவர் கட்டி காத்து வந்த நல்ல பெயர் எல்லாம் சமீபத்தில் சுக்கு நூறாகிவிட்டது. இருப்பினும் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது புதிய பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அத்தனை வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அவரை நடிகையின் அம்மா அசிங்கப்படுத்திட்டாராம்.
சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர் அந்த ஆறெழுத்து நடிகர். அறிமுகமான புதிதில் அவரை கிண்டல் செய்யாதவர்களே இல்லை. ஆனால் அவர் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து திறமையை காண்பித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். நிலைமை இப்படி இருக்க அவர் இப்போது புதிய பயணம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதை அவரது ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக வரவேற்றார்கள்.

உருவான பிரச்னை: நிலைமை இப்படி இருக்க நடிகரின் மனைவி சமீபத்தில் நடிகர் பற்றி புது குண்டை தூக்கிப்போட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டிருந்த நடிகையுடன்; சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார் நடிகர். ஆனால் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னதாக அவர்கள் இரண்டு பேருக்கும் மீண்டும் பேட்ச் அப் ஆகிவிட்டது. இதனால் இஷ்டத்துக்கு ஜோடியாக சுற்றிக்கொண்டிருந்தார்கள். அதை கண்டுபிடித்த மனைவி பெரிய பிரச்னையை கிளப்பிவிட்டார்.
என்ன நடக்கும்?: நடிகரின் மனைவி அப்படி சொன்னதும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ஷாக்கில் உறைந்து போனார்கள். பிறகு என்ன செய்வது எப்படியாவது தங்கள் தலைவருக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதற்காக மனைவியையே தரக்குறைவாக பேசினார். ஆனால் ஏன் பேசினோம் என்று அவர்களையே நடிகர் ஃபீல் செய்ய வைத்துவிட்டார். ஆம், எந்த நடிகையோடு நடிகரை இணைத்து சந்தேகங்கள் எழுந்தனவோ அந்த நடிகையுடனேயே நடிகர் இஷ்டத்துக்கு உலா வர ஆரம்பித்துவிட்டார். இதுவெல்லாம் சேர்ந்து அவருக்கு என்ன மாதிரியான பிரச்னைகளை கொடுக்கப்போகின்றனவோ தெரியவில்லை.
நடிகையின் மனநிலையில் மாற்றம்: சூழல் இப்படி இருக்க நடிகையின் மனநிலைமையில் மாற்றம் வந்துவிட்டதாம். இந்த நடிகரோடு சேர்ந்து பல விஷயங்களை செய்ததன் விளைவாக எல்லோரிடமும் கெட்ட பெயரைத்தான் வாங்கியிருக்கிறோம். எனவே நடிகரை விட்டு விலகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். ஆனால் நடிகரோ நடிகையிடமிருந்து மீள முடியவில்லையாம். பல முறை ஃபோன் செய்தாலும் நடிகை கொஞ்சம்தான் ரெஸ்பான்ஸ் செய்கிறாராம்.
அசிங்கப்படுத்திய அம்மா?: இதனால் விரக்தியடைந்த நடிகர் உடனடியாக அம்மணியின் வீட்டுக்கு சென்றாராம். அப்போது அம்மணியின் அம்மா வீட்டில் இருந்திருக்கிறார். நடிகரை பார்த்ததும் உங்களுக்கு இன்னும் அறிவு வரவில்லையா?.. இவ்வளவு நடந்த பிறகும் என் மகளை தேடி வந்திருக்கிறீர்களே என செமத்தியான டோஸ் விட்டுவிட்டாராம். நடிகையோடு இருக்கும்போதெல்லாம் நம்மை சப்போர்ட் செய்து; தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்த நடிகையின் அம்மாவே இப்படி பேசியதை பார்த்து தலை தொங்கி வந்தாராம் நடிகர்.


Click it and Unblock the Notifications















