தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்.. தலையைவிட்ட நடிகர்.. காசு.. பணம்.. துட்டு.. Money.. Money

சென்னை:ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, ரிலீஸ் ஆகும் வரை என்னென்ன பிரச்னைகள் வந்தாலும் அதில் நேரடியாக பாதிக்கப்படும் முதல் நபர் தயாரிப்பாளர் தான். காரணம் ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் சுமார் சில கோடிகள் தொடங்கி பல கோடிகள் வரை செலவு செய்பவர் தயாரிப்பாளர். இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டை விடவும் கூடுதலாக படத்தின் பட்ஜெட் செலவாகிறது என்றாலும் அதற்காகவும் தனது சொத்துக்களை விற்றோ, யாரிடமாவது கடன் வாங்கியோ, கெஞ்சிக் கூத்தாடியோ அந்த படத்தை தயாரித்து முடிப்பவர் தயாரிப்பாளர் தான்.

ஒரு திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும், தயாரிப்பாளர்கள் செல்வச் செழிப்புடன் இருந்தால் மட்டும் தான் ஒரு திரையுலகம் நன்றாக இருக்கும். இப்படி இருக்கையில் தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் பட்ஜெட்டில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை நடிகரின் சம்பளத்திற்கே சென்று விடுகிறது. இப்படி இருக்கையில் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லது லாபத்தில் பங்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

Gossip Kollywood

நடிகரிடமே தஞ்சம்: இப்படி இருக்கையில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கும் படத்தை ரிலீஸ் செய்ய பெரிய அளவிலான தொகை தேவைப்பட்டதால், தயாரிப்பாளரும் தன்னால் முடிந்த அளவுக்கு எங்கெங்கோ முயற்சி செய்து பார்த்துள்ளார். ஆனால் பணத்தை புரட்ட முடியாததால் என்ன செய்வது என்று தெரியாமல், நடிகரிடமே தஞ்சம் அடைந்துள்ளார். அதாவது, உங்களுக்கு சம்பளமாக இந்த படத்திற்காக செட்டில் செய்த பணத்தைக் கொடுங்கள், தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை மொத்தமாக நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

நடிகரின் பண்பு: நடிகரோ முதலில் இந்த ஆஃபரை ஏற்றுக் கொள்ள தயங்கி உள்ளார். ஆனால் இறுதியில் என்ன நினைத்தாரோ, சரி என்று கூறிவிட்டு படத்தை தனது நண்பர் மூலம் ரிலீஸ் செய்துள்ளார். இப்படி இருக்கையில் நடிகருக்கு தற்போது அவர் முதலீடு செய்த பணத்தை விட இரு மடங்கு அப்படியே லாபமாக வரவுள்ளதாம். ஆனாலும் நடிகரோ, தயாரிப்பாளர் இந்த படத்திற்காக மிகவும் சிரமப்பட்டுவிட்டார். எனவே அவருக்கும் கொஞ்சம் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணம் வந்த பின்னரும் மாறாத இந்த நடிகரின் பண்பு குறித்து கேள்விப்பட்டவர்கள் பாராடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X