அப்பா இருந்திருந்தா பத்து படம் எடுத்துருப்பாரு... மகனை எண்ணி கவலைப்படும் கோடம்பாக்கம்!
லோ பட்ஜெட் எடுத்து அப்பா சேர்த்த காசெல்லாம் இப்படி மகனின் ஹை பட்ஜெட் ஆசையால் கரைகிறதே... என்று கவலைப்படுகிறது கோலிவுட்.
பாம்பு முதலிய விலங்குகளை வைத்தும் சாமி படங்கள் எடுத்தும் லோ பட்ஜெட்டில் ஹெவி லாபம் பார்த்தவரது மகன் இப்போது ஹை பட்ஜெட் படங்களாக திட்டமிடுகிறார். அதில் ஆரம்பமாகுமா அப்படியே ட்ராப் ஆகுமா என்ற சந்தேகத்தில் நிற்கும் சரித்திர படமும் ஒன்று.

இந்த படத்தை கேன்ஸ் விழாவில் துவக்கலாம் என்று திட்டமிட்டார்கள். அந்த தொடக்க விழாவுக்கு மட்டும் பத்து கோடி செலவானதாம். அத்தனையும் நீரில் கரைக்கப்பட்ட பெருங்காயம் ஆகிவிட்டது.
"அப்பா இருந்து இருந்தா இந்த காசுக்கு பத்து லோ பட்ஜெட் படங்கள் எடுத்து லாபம் பார்த்துருப்பார்," என்று பெருமூச்சு விடுகின்றனர் கோடம்பாக்கத்து பெரிய மனிதர்கள்.
Comments


Click it and Unblock the Notifications