»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரைப்பட உலகில் ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்த நடிகை அவர். சிவாஜியுடன் நிறைய படங்கள்நடித்தவர். இன்றும் சில படங்களில் அம்மா வேடத்தில் நடித்து வருபவர்.

இவர் சிரித்தால் அனைவருமே கிறங்கிப் போவார்கள். இவரது சிரிப்பில் சொக்கிப் போகாத அந்தக்காலஇளைஞர்களே கிடையாது. புன்னகை அரசி என்கிற பட்டம் உண்டு. நடிகைகளில் முதன்முதலாக சிறிய விமானம்வாங்கியவர் அவர்.

நீச்சல்குளத்துடன் பெரிய பங்களா கட்டியவர். பெங்களூர், சென்னையில் ஹோட்டல்கள் வைத்திருந்தவர். இவர்நடித்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலை கிடையாது. இவரது கணவர் பெரிய பணக்காரர். கணவர்பெயரில் பெரிய பெரிய குடியிருப்புகள் சென்னையில் உள்ளன.

குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து தாய்மார்களிடையே வரவேற்பைப் பெற்றவர். குறிப்பாக அம்மன்வேடங்கள் இவருக்கு மிகவும் பொருத்தம். இவருக்கென்று தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு நல்ல இமேஜ் உண்டு .

அப்படிப்பட்ட அந்த நடிகை இப்போது மதுவுக்கு அடிமையாகிவிட்டார். சமீபகாலமாக, அவுட்டோர் ஷூட்டிங்செல்லும்போது மது அருந்திவிட்டுச் செல்கிறாராம். லொகோஷனில் பல கலாட்டா செய்கிறாராம். சமீபத்தில் ஒருதெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோதும் கலாட்டா செய்ததாக தமிழ் சினிமா உலகில்கிசுகிசுக்கிறார்கள்.

பெயரைக் கேள்விப்பட்டு அய்யோ.. இவரா இப்படி என்கிறார்கள்.. விஷயம் தெரிந்தவர்கள்..

Read more about: actress, cinema, krvijaya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil