»   »  வெவரமான குஷ்பு

வெவரமான குஷ்பு

Subscribe to Oneindia Tamil

தனது கணவர் சுந்தருக்காக ஹீரோயின் செலக்சனில் மிகத் தீவிரமாக இருக்கிறார்குஷ்பு.

நடிகையாக கலக்கு கலக்கி வந்த குஷ்பு இப்போது பிரபல தயாரிப்பாளர்களில்ஒருவராகி கலக்கி வருகிறார். டிவியில் கல்கி என்ற சீரியலை தயாரித்து வரும் குஷ்பு,அப்படியே சினிமா தயாரிப்பிலும் அசத்தி வருகிறார்.

அர்ஜூன், ரீமா சென்னை வைத்து கணவர் சுந்தர் இயக்கத்தில் கிரி என்ற படத்தைத்தயாரித்த குஷ்பு இப்போது அதே ரீமா சென்னை வைத்து மாதவனுக்கு ஜோடியாகஅவரைப் போட்டு ரெண்டு என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இதை இயக்கியதும்சுந்தர் தான்.

அடுத்து சுந்தரை வைத்து இன்னொரு படத்தை தயாரிக்கவுள்ளார் குஷ்பு.தலைநகரத்திற்குப் பிறகு இப்படத்தில் சுந்தர் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஹீரோயின் செலக்ஷனை குஷ்புவேதான் நடத்துகிறாராம்.

குஷ்புவின் ஹீரோயின் செலக்ஷன் படு வித்தியாசமாக இருக்கிறதாம். ஹீரோயின் படுசூப்பராக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறாராம் குஷ்பு. அதேசமயம்,ஆத்துக்காரரோடு அம்மணி சங்கமித்து விடாத அளவுக்கும் ஏகப்பட்டகொக்கிகளை சைட் பை சைடாக போட்டு வைத்துள்ளாராம்.

ஏற்கனவே தலைநகரம் படத்தில் ஜோதிர்மயியுடன், சுந்தர் மிக நெருக்கமாக இருப்பதுபோல ஏகப்பட்ட காட்சிகளை வைத்ததால் அப்செட் ஆனார் குஷ்பு என்றார்கள்.

விட்டால் சுந்தரும் ஜோதிரும், ஜோதியில் கலந்து விடுவார்கள் என்ற அளவுக்குகிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் சுதாரித்துக் கொண்ட குஷ்பு குறுக்கால புகுந்துஆட்டத்தைக் கலைத்து விட்டார்.

இதேபோன்ற அனுபவம் மறுபடியும் வந்துடப் படாதே என்ற எச்சரிக்கையில்தான் படுவெவரமாக ஹீரோயின் செலக்ஷனை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளாராம்குஷ்பு.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil