ஓவர் ஆட்டிட்யூட் காட்டுறாரு ஒல்லி மியூசிக் டைரக்டர்.. கடுப்பான தங்கச்சி.. ஒரே போடா போட்டுட்டாராம்!
சென்னை: அக்கா அறிமுகப்படுத்திய அந்த மியூசிக் டைரக்டர் இப்போ நம்ம படத்துக்கு கேட்டா ஓவர் ஆட்டிட்யூட் காட்டுறாரே என காண்டான தங்கை இயக்குநர் அந்த இசையமைப்பாளரே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. அக்கா படத்தில் அப்பா நடித்த நிலையில், எனக்கும் ஒரு படம் பண்ணிக் கொடுத்தே ஆக வேண்டும் என செக் வைக்க, சரி உனக்கு ஒரு 10 நாள் நடிச்சித் தரேன் என அப்பா பரந்த மனசுடன் ஓகே சொல்லி விட்டாராம்.
கடைசியில் தங்களுக்கு அப்பா எதுவுமே செய்யலை என மகள்கள் புலம்பக் கூடாது என நினைத்து தான் உச்ச நட்சத்திரம் இதையெல்லாம் செய்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

போட்டா போட்டி: ஆரம்பத்தில் தங்கைக்கு தான் அப்பா பட வாய்ப்பு கொடுத்திருந்தார். ஆனால், எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ அந்தளவுக்கு தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை சொதப்பி இன்று வரை குடும்பத்துக்கே பெரிய தொல்லை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் இளைய மகள். அதன் பின்னர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்த அவர், தற்போது அக்கா அதிரடியாக மாஸ் காட்டிய நிலையில், நாமும் ஒரு படம் பண்ணியே தீர வேண்டும் என களத்தில் குதித்துள்ளாராம்.
சிஷ்யன் தான் ஹீரோ: குருவின் தீவிர ரசிகரும் சிஷ்யனுமான அந்த நடிகர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே அப்பா நடித்த படத்தில் அவருக்கு பதிலாக நடித்து சிஷ்யன் படத்தை சின்னா பின்னம் படுத்தினாலும், வேறு யாரும் தங்கை இயக்குநரை நம்பி தலையை கொடுக்காத நிலையில், நட்புக்காக அவர் நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டாராம்.
அந்த இசையமைப்பாளர் வேண்டாம்: ஒல்லி இசையமைப்பாளரை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யலாம் என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், தங்கை அந்த இசையமைப்பாளர் வேண்டவே வேண்டாம் என ஒற்றைக் காலில் இருப்பதாக கூறுகின்றனர்.
என்ன காரணம்: அந்த இசையமைப்பாளர் தான் சமீபத்தில், புயலையே ஓரங்கட்டி முன்னிலையில் இருக்கும் நிலையில், ரொம்பவே ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார் என்றும் அதன் காரணமாகவே அவரை வேண்டாம் என தங்கை இயக்குநர் விடாப்பிடியாக கூறி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தொடர்ந்து தனது படங்களுக்கு அந்த இசையமைப்பாளர் இசைத்து ஹிட் கொடுத்து வரும் நிலையில், அப்பாவுக்கு அந்த இசையமைப்பாளர் இருந்தா நல்லா இருக்கும் என்றும் மகளை கன்வின்ஸ் செய்து வருவதாகவும், அதெல்லாம் முடியாது என தனது பிடிவாதத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











