இங்க பார்யா... உச்ச ஹீரோவுக்காக சம்பளத்தில் டிஸ்கவுன்ட்டாமே...தாராள ஹீரோயினின் தாறுமாறு சலுகை!

By

சென்னை: டாப் ஹீரோ படத்தில் நடிக்க அந்த தாராள ஹீரோயின் சம்பளத்தில் சலுகை காட்டி இருக்கிறாராம்.

சீனியர் ஹீரோயின் ஆன பிறகுதான் சிலருக்கு அதிக வாய்ப்புகள் வந்து குவிகிறது. அந்த வகையில், நம்பர் நடிகைக்கும் லக்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன.

கோடிகளுக்கு உயர்ந்தார்

கோடிகளுக்கு உயர்ந்தார்

அவர் நடித்த படங்கள், சில வருடங்கள் முன்பு தொடர்ந்து ஹிட்டாகின. இங்குதான் ஹீரோயினுக்கு டர்னியிங் பாயின்ட். தனது சம்பளத்தை திடீரென கோடிகளுக்கு உயர்த்தினார். தொடர் ஹிட்டை காரணமும் சொன்னார். ஏற்றுக்கொண்டார்கள் தயாரிப்பாளர்கள். அடுத்தும் ஓரிரு படங்கள் ஹிட்டாக, இன்னும் சில கோடிகள் உயர்த்தினார்.

ஹீரோவுக்கு இணையான

ஹீரோவுக்கு இணையான

தமிழ் சினிமாவில், மூன்றாம் கட்ட ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் வாங்கினார். இதற்காக சில சீனியர் நடிகைகளே அவரை பாராட்டினர். ஏனென்றால் ஆணாதிக்க சினிமாவில் இது பெரிய சாதனைதான். தயாரிப்பாளர்களும் கேட்டதைக் கொடுக்கத் தொடங்கினர். காதலன் தயாரிக்கும் படத்துக்கு இவர்தான் பணம் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மறுக்காமல் சென்றார்

மறுக்காமல் சென்றார்

இவர், உச்சநடிகரின் முந்தையப் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ரோல் சிறியது என்றாலும் சம்பளம் அதிகம். அதாவது சுமார் 5.5 கோடி என்கிறார்கள். இதையடுத்து காதலன் இயக்கும் படத்தில் நடிக்க ஆயத்தமான அவரை, மீண்டும் அழைத்தார்கள் உச்ச நடிகர் படத்துக்கு. மறுக்காமல் சென்றார். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் நடிகை, கறார்.

இயல்பாக மிரட்டுகிறார்

இயல்பாக மிரட்டுகிறார்

அதோடு வயதாவதற்குள் இன்னும் சம்பாதித்துவிட வேண்டும் என்றும் லட்சியம். அந்தப் படத்தில் ஏகப்பட்ட முன்னாள் ஹீரோயின்கள் இருக்க, இவருக்கும் முக்கியத்துவம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த சிவமயமான இயக்குனரின் முந்தைய படத்திலும் உச்ச நடிகரின் முந்தைய படத்திலும் நம்பர் நடித்திருப்பதால், செட்டில் இயல்பாக மிரட்டுகிறாராம் நடிப்பில்.

டிஸ்கவுன்ட்

டிஸ்கவுன்ட்

இந்நிலையில், இந்தப் படத்துக்காக, சம்பளத்தில் நம்பர் நடிகை சலுகைக் காட்டியிருக்கிறார் என்கிறார்கள். இதில் நடிகைக்கு முக்கியமான ரோல் என்றாலும் சின்ன கேரக்டர்தானாம். அதனால் முந்தையப் படத்துக்கு வாங்கிய தொகையில் இருந்து 20 சதவிகிதம் டிஸ்கவுன்ட் கொடுத்திருக்கிறாராம் நடிகை. உச்ச நடிகர் படம் என்பதால் இந்த டிஸ்கவுன்ட் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X