»   »  லஷ்மி ராய் வீட்டில் ஆர்யா!

லஷ்மி ராய் வீட்டில் ஆர்யா!

Subscribe to Oneindia Tamil

இங்க பார்ய்யா என்று சொல்லும் அளவுக்கு ஆர்யாவுக்கும், லஷ்மி ராய்க்கும் இடையே கதகதப்பான நட்புஏற்பட்டு, இறுகியிருக்கிறதாம்.

பெல்காம் கலக்கல் அழகி லஷ்மிராயை சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் பார்த்துப் பதறிப் போயுள்ளார் ஆர்யா.அடடா, இப்படி ஒரு அழகு நம்ம கண்ணில் எப்படி மாட்டாமல் போனது என்று மெய் சிலிர்த்து, லஷ்மி ராயுடன்நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

இப்போது இந்த நட்பு அப்படியே பெவிக்கால் கம் போட்டு இறுக்கியது போல செட் ஆகியுள்ளதாம்.ஆரம்பத்தில் செல்லில், கடலை போட்டு வந்த ஆர்யா இப்போதெல்லாம் ராயின் வீட்டுக்கேப் போய் ராவிவருகிறாராம்.

ஆர்யாவுடனான நட்பை கசடற கற்று வருகிறாராம் பெல்காம் பென்குயின். சாயந்திரமானதும், நுங்கம்பாக்கத்தில்உள்ள ராயின் வீட்டில் ஆர்யாவை தவறாமல் பார்க்க முடிகிறது என்கிறார்கள் கோலிவுட் குருவிகள்.

ராய்க்கும், ஆர்யாவுக்கும் நட்பு ஏற்பட, ராயின் கும்தலக்கா கவர்ச்சிதான் காரணம். பட வாய்ப்புகளைப் பிடிக்கஅவர் படு ஓப்பன் டிரஸ்ஸில் பார்ட்டிகளுக்கும், பட விழாக்களுக்கும் போய் வருகிறார். அப்படிப் போனஇடத்தில்தான் ஆர்யாவின் அட்டாக்கில் சிக்கி அட்டாச் ஆகி விட்டார்.

ஆர்யா அந்த விஷயத்தில் தில்லாலங்கடி பார்ட்டி. முதலில் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஜோடி போட்டசமிக்ஷாவுடன் சங்கமமாக இருந்தார். படு சமர்த்தாக போய்க் கொண்டிருந்த நட்பு திடீரென ஜகா வாங்கிக்கொண்டது.

பிறகு பத்மப் ரி>யாவுடன் பாசமாக இருந்தார். சைடியேலே பூஜாவுடனும் நட்பு பாராட்டி வந்தார். இப்போதுராயிடம் லாயல் ஆகியிருக்கிறார்.

இது என்ன, நட்பா இல்லை காதலா என்று தெரியாமல் கோலிவுட் கண்கள் கழுகுப் பார்வை பார்த்து வருகின்றன.

ஆர்யா, அசத்துய்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil