»   »  ராயை ராவும் நாயகர்கள்

ராயை ராவும் நாயகர்கள்

Subscribe to Oneindia Tamil

லட்சுமி ராய்க்கு ஏகப்பட்ட தலைவலியாம். எல்லாம் சில நாயகர்கள் செய்யும் ராத்திரிநேரத்து ராவடியால்தானாம்.

முதல் படத்திலேயே முழுக்க கிளாமருக்குத் தாவி விட்டதாலோ என்னவோ லட்சுமிராயின் கவர்ச்சிக்கு இப்போதெல்லாம் பெரிய அளவில் கிராக்கி இல்லாமல் போய்விட்டது. ஆனாலும், சில நடிகர்களின் மனங்களை லட்சுமி ராய் இன்னும் பிராண்டிக்கொண்டுதான் இருக்கிறாராம்.

ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ரைஸிங் குமார் ரொம்பவே நோகடித்துநொங்கெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக அவரது தொல்லையிலிருந்துவிடுபட்டார் ராய்.

இப்போது சில நடிகர்களின் டகாய்ச்சி வேலைகள் ராய்க்கு பெரும்பஞ்சாயத்தாகியுள்ளதாம்.

அவருடன் நடிக்கும்-நடித்த ஹீரோக்களில் சிலர் தினசரி இரவு நேரங்களில்தொலைபேசி மூலம் கிளாமராக பேசி ராயை டாவடிக்கிறார்களாம். இது பெரியரோதனையாக போய் விட்டதாம் ராய்க்கு.

எப்படி கண்டிப்பது என்று தெரியாமல் முழிக்கிறாராம். பேசாமல் துண்டித்து விடலாமா(போனைத்தான் அய்யா!) என்று கூட கோபத்தில் சில நேரங்களில் நினைப்பாராம்.அந்த அளவுக்கு கடித்துக் குதறுகிறார்களாம் நாயகர்கள்.

சமீபத்தில் புதுமைப் பித்தன் நடிகர் அடிக்கடி ரோதனை செய்யஆரம்பித்திருக்கிறாராம். இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தனர். அப்படத்தில்வடிவேலுவும் சேர்ந்து குண்டக்க மண்டக்க காமெடி செய்திருந்தார்.

அப்படத்தில் நடித்போது லட்சுமி ராயிடம் நன்கு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாரம்புதுமைப் பித்தன். அப்படியே அந்த நட்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டாராம்.இப்போதெல்லாம் அவரது தொலைபேசி அழைப்புகளில் ஜொள்ளு ஜாஸ்தியாகிக்கொண்டிருக்கிறதாம்.

இதனால் கடுப்பாகி இருக்கிறாராம் ராய். இந்த ஜொள்ளர்கள் என்ன செய்தால்தேவலை என மண்டையைப் பிடித்து குழம்பிக் கொண்டிருக்கிறாராம்.

அழகுன்னாலே ஆபத்துதான், ஆனால் இது பேராபத்தா இருக்கே..

Read more about: lakshmi rais troubles
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil