கூடா நட்பு கேடாய் முடிந்தது.. பிரபல பாடகிக்கு இந்த நிலைமை வர 'லேட் நைட்' பார்ட்டிதான் காரணமாம்!

Recommended Video

பிரபல பாடகிக்கு இந்த நிலைமை வர 'லேட் நைட்' பார்ட்டிதான் காரணமாம்!

சென்னை: பிரபல பாடகி நடிகை குடும்பத்தினரால் ஒதுக்கப்படுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அருமையான குரலுக்கு சொந்தக்காரர், நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில், எந்த விஷயத்தையும் அலசி ஆராயும் தன்மை, பிரபலங்களுடன் நெருக்கம் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவுக்கு செல்லமானார் அந்த பாடகி.

வானோலியில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினாலும் திரைத்துறையில் அசுர வளர்ச்சி கண்டார். இளசுகளை ரேடியோ பக்கம் திரும்ப வைத்ததில் பெரும் பங்கு இவருக்கு உண்டு.

ஒரு பாடல் கேரண்டி

ஒரு பாடல் கேரண்டி

தனது தனித்துவமான குரலில் இவர் பாடிய குத்து பாடல்களும் ஐட்டம் பாடலுல்களும் சொல்லி அடித்தன. இவர் பீக்கில் இருந்த சமயத்தில் வெளிவந்த படங்களில் இவரது குரலில் ஒரு பாடலாவது எழுந்து ஆட்டம் போட வைக்கும் வகையில் கேரண்டியாக இருந்து விடும்.

பாராட்டு பத்திரம்

பாராட்டு பத்திரம்

இதுபோக தொலைக்காட்சியில் இவர் பங்கேற்று தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஹிட்டோ ஹிட். வழக்கமாக தொகுப்பாளர்கள் தான் பிரபலங்களுக்கு பாராட்டு பத்திரம் வசிப்பார்கள்.

சில படங்கள்

சில படங்கள்

ஆனால் இவருக்கு பிரபலங்கள் பாராட்டு பத்திரம் வாசித்தார்கள். வானோலி அறிவிப்பாளர், பாடகி என படிப்படியாக வளர்ந்த இவர் முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் நடித்தார்.

திருமணம்

திருமணம்

பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசினார். சினிமா, பாடல், டப்பிங் என அசத்தி வந்த அவர். பின்னர் திரைத்துறையை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார்.

லேட் நைட் பார்ட்டி

லேட் நைட் பார்ட்டி

நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென லேட் நைட் பார்ட்டி ரூபத்தில் புயல் வீசத் தொடங்கியது. சினிமாத்துறையில் முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலருடன் லேட் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டார் அவர்.

விவாகரத்து

விவாகரத்து

இதனால் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். கிசுகிசுக்கள் தொடர்ந்தன. இதன் மூலம் பெரும் பெரும் பிரச்சனைகள் வெடித்து பூதாகரமானது. இதனை தொடர்ந்து திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

தொலைத்துவிட்டார்

தொலைத்துவிட்டார்

குடும்பத்தினர் நட்பு வட்டாரம் என பலர் எடுத்துக்கூறியும் எச்சரித்தும் லேட் நைட் பார்ட்டியை கைவிட மறுத்ததால் இன்று பல பிரச்சனைகளுக்கு ஆளாகி குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்.

ஒரு வேலையால்..

ஒரு வேலையால்..

இவரின் கூடா நட்பும் தவறான சகவாசமும்தான் குடும்பத்தினரும் கூட பிறந்தவர்களும், நட்பு வட்டமும் இவரை ஒதுக்க காரணமாம். யோசிக்காமல் செய்த ஒரு வேலையால் பல நெருக்கடிகளுக்கு ஆளான அவர், மன அழுத்தத்திற்கு ஆளாகி அனைத்தையும் இழந்துவிட்டார்.

கூடா நட்பு...

கூடா நட்பு...

சொன்னதை அப்போதே கேட்டிருந்தால் இன்று இப்படி ஒரு பட்டத்தை வாங்கிக்கொண்டு இருத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என கூறுகின்றார்கள் கோலிவுட்காரர்கள். கூடா நட்பு கேடாய் முடிந்துவிட்டது என்றும் கிசு கிசுக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X