»   »  இன்விடேஷனே வேண்டாம்... அவாய்ட் செய்யும் அடைகோழி ஹீரோ

இன்விடேஷனே வேண்டாம்... அவாய்ட் செய்யும் அடைகோழி ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
தனக்கு யாருமே தேவையில்லை என முடிவு செய்த அடைகோழி ஹீரோ,,!!

தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களும் ஒரு ரூட்டில் போனால் தான் மட்டும் தனி ரூட்டில் போவேன் என அடம் பிடிக்கும் ஹீரோ அவர். படத்தில் நடிப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டது என்று புரமோஷன்களுக்கு வர மாட்டார்.

மேயிற மாட்டை நக்குற மாடு கெடுத்த கதையாக அவரை பார்த்து சில சில்வண்டுகளும் புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இனிமா கொடுக்கிறார்கள்.

பட புரமோஷன்களுக்கு மட்டுமல்ல பொது விழா, நிகழ்ச்சிகள் எதற்குமே அவர் வருவதில்லை. முன்பெல்லாம் இன்விடேஷனாவது வாங்கிக்கொள்வாராம். ஆனால் இப்போது அப்படி இல்லை. யாராவது திருமண அழைப்பு தர வேண்டும் என்றாலே, "எப்படியும் அவர் வரப்போறதில்லை. அதனால எதுக்கு இன்விடேஷனை வேஸ்ட் பண்றீங்க...," என்று நடிகர் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

அடைகோழி தனக்கு யாருமே தேவையில்லை என்று முடிவு எடுத்து விட்டதுபோல...!

Read more about: gossip கிசுகிசு
English summary
That Adaikozhi actor is avoiding to receive the invitations for any cinema or private functions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X