»   »  புது வெப்சைட், புது ஆப்: அரசியலுக்கு வர சத்தமில்லாமல் வேலை பார்க்கும் லீடர் நடிகர்

புது வெப்சைட், புது ஆப்: அரசியலுக்கு வர சத்தமில்லாமல் வேலை பார்க்கும் லீடர் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லீடர் நடிகர் அரசியலில் குதிக்க சத்தமில்லாமல் வேலையை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

லீடர் நடிகருக்கு அரசியலில் குதித்து தமிழகத்தின் முதல்வர் ஆகும் ஆசை உள்ளது. ஒரு படத்தில் பன்ச் வசனம் வைத்து அம்மாவிடம் சிக்கினார். அந்த படம் ரிலீஸாவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

உடனே அம்மாவை பார்த்து அவரை சமரசம் செய்ய கிளம்பினார். ஆனால் அவர் நடிகரை பார்க்க நேரம் ஒதுக்கவே இல்லை.

நடிகர்கள்

நடிகர்கள்

அம்மா இல்லாத நேரத்தில் உச்ச நடிகரும், வேர்ல்டு ஹீரோவும் அரசியலில் குதித்துள்ளனர். இந்நிலையில் லீடரும் தன் பங்கிற்கு துணிந்து அரசியல் செய்ய தீர்மானித்துள்ளாராம்.

வேலை

வேலை

அரசியலுக்கு வருகிறோம் என்று கூறி உச்ச நடிகரும், வேர்ல்டு ஹீரோவும் அறிவித்துவிட்டு இணையதளம், ஆப் என்று கொண்டு வந்துள்ளனர். ஆனால் லீடரோ சத்தமே இல்லாமல் வேலை செய்கிறாராம்.

ஆப்

ஆப்

லீடரின் இயக்கத்திற்கு புதிய இணையதளம் துவங்கி அடையாள அட்டை வழங்கும் பணி எல்லாம் நடந்து வருகிறதாம். இது போக ஆன்ட்ராய்டு ஆப் ஒன்றும் அறிமுகம் செய்துள்ளார்களாம்.

நடிப்பு

நடிப்பு

இணையதளம், ஆப் என்று இயக்கத்தை தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்றியுள்ளோம். அரசியல் இரண்டாம் பச்சம் தான் என்று லீடர் தரப்பு தெரிவித்துள்ளது.

English summary
Buzz is that leader actor has already started work to make his political entry. It is noted that leader actor wishes to become the chief minister of Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil