இருமுனை தாக்குதல்... தவிக்கும் 'பஞ்சாயத்து தலைவர்'!
பஞ்சாயத்துகளுக்கு தலைமை தாங்கும் நடிகர் எந்த நேரத்தில் தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டாரோ வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதோடு பல்வேறு இடங்களில் இருந்து வரும் நெருக்கடிகளால் தவிக்கிறார்.
ஆளுங்கட்சிக்கு திடீர் பகையாளியாகிப் போன அவரை வீழ்த்த ஆளுங்கட்சி துடியாய் துடிக்கிறது. நடிகர் தலைமை பொறுப்பில் இருக்கும் இரண்டு சங்கங்களிலும் அவருக்கு பிரச்னையை ஏற்படுத்தி நெருக்குகிறது. நடிகர் எண்ட்ரி கொடுப்பதற்கு முன்பே அவரை வீழ்த்திவிட வேண்டும் என்பது அவர்களது ப்ளான்.
இன்னொரு பக்கம் மத்தியில் ஆளும் கட்சி தங்கள் பக்கம் அவரை இழுக்கத் துடிக்கிறது. சி எம் கேண்டிடேட் நீங்கதான் என்று கூட வாக்குறுதி கொடுத்து நடையாய் நடக்கிறார்களாம்.
இந்த இருமுனை நெருக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறாராம் நடிகர்.
நிறைய சாதிக்க வயசிருக்கிறது. இப்போது நிதானம், விவேகமா செயல்படுங்க. உச்ச நடிகரைப் பார்த்து நிறைய கத்துக்கங்க என்று நலம் விரும்பிகள் அட்வைஸ் செய்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











