ராஸ்கல், யாரை பார்த்து நக்கல்: வாரிசு நடிகர் மீது கடுப்பில் 'லீடர்'
சென்னை: தனது ஆயுதம் படம் பற்றி ட்விட்டரில் கலாய்த்த அந்த வாரிசு நடிகர் மீது லீடர் கடுப்பில் உள்ளாராம்.
லீடரின் ஆயுதம் படம் படாதபாடு பட்டு ஒருவழியாக ரிலீஸானது. படம் ரிலீஸான வேகத்தில் அவ்வளவு வசூல் செய்துவிட்டது, இவ்வளவு வசூல் செய்துவிட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் படத்தின் வசூல் புதிய சாதனைகள் படைக்க உள்ளது என்று கூறப்பட்டது.
இதை பார்த்த பலரும் வசூல் பற்றி கதை கட்டுவதாகக் கூறி ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். பிரமாண்ட இயக்குனர் இயக்கத்தில் ஸ்டைல் நடிகர் நடித்த படத்தின் வசூலை முந்திவிட்டதாக கூறுவதே இந்த நடிகரின் ரசிகர்களுக்கு வேலையாகிவிட்டது என்று ஆளாளுக்கு ட்வீட் செய்தார்கள். இதை பார்த்த லீடரின் ரசிகர்கள் கோபம் அடைந்து பதிலுக்கு ட்வீட் செய்தார்கள்.
இந்த சண்டையில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனார் அந்த வாரிசு நடிகர். அவரும் லீடரின் படத்தின் வசூல் கணக்கு பொய் என்பது போல கமெண்ட்கள் போட்டுத் தாக்கினார். வாரிசு நடிகரின் இந்த செயல் பற்றி லீடருக்கு தகவல் சென்றுள்ளது.
படம் சூப்பராக ஓடும் மகிழ்ச்சியில் இருக்கும் லீடர் வாரிசு நடிகரின் செயலை பற்றி கேட்டதும் கடுப்பாகிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications










