கலெக்ஷன் ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கும் நடிகர்!
ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் மொத்த வசூல் விபரம் வந்தபிறகு அடுத்த படத்துக்கு சம்பளம் கேட்கலாம் என்று காத்திருக்கிறாராம் நடிகர்.
வந்த விஷயமே தெரியாமல் காணாமல் போயிருக்க கூடிய ஒரு படத்தை ஒரு கட்சிக்காரர்கள் பிரச்சினை பண்ணி உலக லெவலுக்கு பெரிய ரீச்சைத் தந்துவிட்டார்கள். இந்த படத்தின் பட்ஜெட் ஹெவி என்பதால் படம் ரிலீஸுக்கு பிறகு இந்த படத்தின் வியாபாரத்தை வைத்து சம்பளம் நிர்ணயிக்கலாம் என்று காத்திருந்தாராம் நடிகர்.
படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக எகிறும் என்பதால் இப்போது மொத்த வசூல் விபரம் வரட்டும் என்று காத்திருக்கிறாராம்.
இந்த படத்துக்கே 40 வாங்கினார். வரி போக 28 கைக்கு போனதாம். அனேகமாக அவர் தனது சம்பளத்தை 60 ஆக உயர்த்தலாம் என்கிறார்கள்.
அது சரி!


Click it and Unblock the Notifications











