தியேட்டர் திறக்க சென்று நடிகையை ஹோட்டலில் வேட்டையாடிய நடிகர்?.. அப்செட்டான நடிகை?

By Staff

சென்னை: திரையரங்கு ஒன்றை திறப்பதற்காக சென்ற நடிகர் அதோடு நிற்காமல் ந்இன்னொரு வேலையையும் பார்த்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அந்த நடிகர். தொட்டதெல்லாம் ஹிட்டானதால் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் துட்டு அவர் படங்களுக்கு கலெக்‌ஷனில் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இதனால் தான்தான் இனி எல்லாமே என்ற நினைப்புக்கு அவர் வந்துவிட்டதாகவும் அவ்வப்போது தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 Leading Actor went to open a theater and did not stop there but did a another job

தொடர் பிரச்னை: நடிகரின் ப்ரொபஷ்னல் இப்படி சீராக சென்றுகொண்டிருந்தாலும் பெர்சனல் கொஞ்சம் சீரற்று சென்றுகொண்டிருக்கிறதாம். வளர்த்துவிட்டவருடன் பேச்சுவார்த்தையை நிறுத்திய அவர் அடுத்ததாக மனைவியுடனும் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டாராம். இதனால் கடல் தாண்டி அவர் மனைவி செட்டில் ஆகிவிட இங்குள்ள கடற்கரை வீட்டில் நடிகர் தனியாகத்தான் இருக்கிறாராம்.

பிரச்னை மட்டுமில்லை: இந்தப் பிரச்னைக்கு காரணமே அவரை சுற்றி இப்போது தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் கிசுகிசுக்கள்தான். கிசுகிசு என்றால் சாதாரணமானது இல்லை வாரிசு நடிகையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்ற கிசுகிசு எழுந்து கொஞ்சம் அடங்கியது. அதற்குள் பழைய நடிகை ஒருவரிடம் மீண்டும் சரணாகதி அடைந்திருக்கிறாராம். ஏற்கனவே அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் அப்போது அவர்களை பிரிப்பதற்கு குடும்பம் படாத பாடு பட்டதாகவும் பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தோண்டப்படும் பழைய விஷயங்கள்: நடிகர் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்த படத்துக்காக தயாராகிவருகிறார். சூழல் இப்படி இருக்க நடிகரின் பழைய விஷயங்களை எல்லாம் தோண்டி எடுத்து கோடம்பாக்கத்தில் பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர் சிலர். அதன்படி பல வருடங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

என்ன நடந்தது: அதாவது பல வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் கோட்டை ஊர் ஒன்றில் பெரிய தலை ஒன்று திரையரங்கை திறந்தது. அதனை திறந்து வைக்க வந்தது இந்த நடிகரும், தாராள நடிகையும்தான். இதில் விஷயம் என்னவென்றால் நடிகர் திறந்து வைத்த தியேட்டரில் முதல் படமாக ஓடியது அவருக்கு போட்டி நடிகர் நடித்த படம். அந்தப் படம் மெகா ஹிட்டானது வேறு கதை.

வேட்டையாடிய நடிகர்: தியேட்டர் திறப்பதற்கு முதல்நாள் இரவே கோட்டைக்கு நடிகரும், நடிகையும் வந்துவிட்டார்களாம். இரண்டு பேருக்கும் தியேட்டருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு சொகுசு ஹோட்டலில் ரூம் போடப்பட்டிருக்கிறது. நடிகரும், நடிகையும் ஏற்கனவே ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். குறிப்பாக அந்தப் படத்தின் பாடல் ஒன்றில் நடிகையின் கிளாமரும், நடிகருக்கும் நடிகைக்கும் இருந்த கெமிஸ்ட்ரியும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்

நிலைமை இப்படி இருக்க அந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்தவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறார்கள். பாடலில் இருந்த கெமிஸ்ட்ரி தீ ஹோட்டலிலும் பற்றிக்கொள்ள இருவரும் ஒரே அறையில் தங்கி பல விஷயங்களை விவாதித்தனராம். அப்போது அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்த நடிகை கொஞ்சம் அட்வாண்ட்டேஜும் கொடுத்தாராம்.

அதை யூஸ் செய்துகொண்ட நடிகர் மறுநாள் காலை ஒன்றும் செய்யாத பிள்ளை போல் தியேட்டரை திறந்து வைத்துவிட்டு நடிகையை அதன் பிறகு கண்டுகொள்ளவே இல்லையாம். பட வாய்ப்பும் கொடுக்கவே இல்லையாம் அதனால் நடிகை ரொம்பவே அப்செட்டாகி என்ன இவர் இப்படி இருக்கிறார் என புலம்பிக்கொண்டே இருந்தாராம். ஒருவழியாக அந்த நடிகைக்கு சில ஆண்டுகள் கழித்து திருமணமும் நடந்து செட்டிலாகிவிட்டாராம். இந்தத் தகவல்தான் தற்போது கோடம்பாகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X