அவளுக்கு கிடைப்பது எனக்கும் வேணும்: சக நடிகையை பார்த்து பிரபல நடிகை பொறாமை

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ஒருவர் சக நடிகையை பார்த்து கடுப்பில் உள்ளாராம்.

பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் அந்த உயர்ந்த நடிகை. ஒரு தமிழ் படத்தில் கூட நடித்திருக்கிறார். அவருக்கு தளபதி படம் மூலம் நடிகையான அழகி மீது பொறாமையாம்.

இதை நாங்கள் சொல்லவில்லை இயக்குனர் ஒருவரே தெரிவித்துள்ளார்.

அழகி நடிகை

அழகி நடிகை

உயர்ந்த நடிகை ஹாலிவுட் சென்று தோல்வி அடைந்தார். ஆனால் அழகிக்கோ ஹாலிவுட் செட்டாகிவிட்டது. அங்கு அழகி நடிகைக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது. இதை பார்த்து பார்த்து கடுப்பாகிக் கொண்டிருக்கிறாராம் உயர்ந்த நடிகை. அழகிக்கு ஹாலிவுட் என்றால், உயர்ந்த நடிகைக்கு பாலிவுட் இருக்கிறது. அப்படி இருந்தும் ஏன் இந்த பொறாமை?

பாலவுட்

பாலவுட்

அழகி போன்று சர்வதேச அளவில் உயர்ந்த நடிகைக்கு புகழ் இல்லை. மற்றபடி அவரும் வெற்றி நாயகி தான். இருந்தும் அழகிக்கு கிடைக்கும் அனைத்தும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று துடிக்கிறார் உயர்ந்த நடிகை. அழகி நடிகைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்ததை பார்த்த உயர்ந்த நடிகை அவரின் திருமணத்தை விட தன் திருமணம் தான் படாடோபமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்கிறார் இயக்குனர் ஒருவர்.

அரண்மனை

அரண்மனை

உயர்ந்த நடிகை வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் அழகி நடிகையோ உயர்ந்த நடிகையின் திருமணம் நடக்கும் அதே மாதத்தில் அரண்மனையில் தனது காதலரை திருமணம் செய்து கொள்கிறார். உயர்ந்த நடிகையின் திருமணம் நடக்கும் இடத்திற்குள் மீடியாக்காரர்கள் செல்ல அனுமதி இல்லை. இதனால் நிச்சயம் அழகியின் திருமணத்தை தான் மீடியாக்காரர்கள் அதிக அளவில் கவர் செய்வார்கள்.

பொறாமை

பொறாமை

அழகி நடிகையின் திருமண ஏற்பாடுகள் குறித்து அறிந்த உயர்ந்த நடிகை மேலும் பொறாமையில் உள்ளாராம். அவளுக்கு மட்டும் எல்லாமே நல்ல படியாக நடக்கிறதே என்று புலம்புகிறாராம். சொல்லப் போனால் உயர்ந்த நடிகையின் வாழ்க்கையும் எந்த குறையும் இல்லாமல் தான் செல்கிறது. தனக்கும் நல்லது நடப்பதை நினைத்து மகிழ்ச்சி அடையாமல் இப்படி அடுத்தவரை பார்த்து கடுப்பாகி நேரத்தை வீணடிக்கிறாரே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X