துணை நடிகரைக் காதலிக்கும் பிரபல நடிகை.. பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் டும் டும் டும்?
பிரபல தமிழ் நடிகை ஒருவர், துணை நடிகரைக் காதலித்து வருகிறாராம்.
சென்னை: தமிழில் வெற்றிப் பட நாயகியாக வலம் வரும் பிரபல நடிகை ஒருவர், துணை நடிகரைக் காதலித்து வருகிறாராம்.
தேசிய விருது பெற்ற படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இந்த நடிகை. தொடர்ந்து அவரது நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரங்கள் கிடைத்து வருவதால், தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

படமொன்றில் சேர்ந்து நடித்த போது, இவருக்கும் ஹீரோவின் தம்பியாக நடித்த நடிகர் ஒருவருக்கும் இடையே நட்பு காதலாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களது காதல் இப்போது வீட்டுப் பெரியவர்களுக்கும் தெரிந்து விட்டதாம். விரைவில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதனால் மகிழ்ச்சியாக உள்ள நடிகை, தனது திருமண தேதியை ஊரைக் கூட்டி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் நடிகர்கள் என்பதால், திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் திட்டத்தில் தான் நடிகை இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











