»   »  பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: அடம் பிடிக்கும் சுள்ளான், தெறித்து ஓடும் நடிகைகள்

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: அடம் பிடிக்கும் சுள்ளான், தெறித்து ஓடும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீரோவாக நடிக்க தயாராகியுள்ள இசை சுள்ளானுடன் நடிக்க மறுத்து முன்னணி நடிகைகள் தெறித்து ஓடுகிறார்களாம்.

பெரிய இடத்து மாப்பிள்ளை வாரிசு நடிகையுடன் சேர்ந்து தனது மனைவி இயக்கத்தில் நடித்த சின்ன நம்பர் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அந்த சுள்ளான். முதல் படத்திலேயே அதுவும் ஒரேயொரு பாட்டுக்காக ஊர், உலகம் எல்லாம் பிரபலம் ஆனார்.

Leading ladies not ready to act with young musician

யாருடா இந்த பையன் முதல் படத்திலேயே அசத்துறான் என்று அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். தொடர்ந்து பெரிய இடத்து மாப்பிள்ளை நடித்த, தயாரித்த படங்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் சுள்ளானுக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது.

இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகும் வேளையில் இசையில் கலக்கும் சுள்ளானையும் அந்த ஆசை ஆட்டிப்படைக்கிறது. முதல் படத்திலேயே பெரிய ஹீரோயினுடன் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாராம்.

இதற்காக வாரிசு நடிகை, பெரிய நம்பர் நடிகை உள்ளிட்ட முன்னணி நடிகைகளை அணுகினார்களாம். என்னாது, சுள்ளானுக்கு ஜோடியா? அவர் பக்கத்தில் நின்றால் நாங்கள் அக்கா போன்று தெரிவோம் என்று கூறி நடிகைகள் தெறித்து ஓடுகிறார்களாம்.

யார் ஓடினால் என்ன நான் நிச்சயம் முன்னணி ஹீரோயினுடன் தான் நடிப்பேன் என்று தீர்மானமாக உள்ளாராம் இசை சுள்ளான்.

English summary
Leading ladies not ready to act with young musician.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil