இது என்னடா புதுக்கதை.. அந்த நடிகையின் திருமணம் நின்று போனதற்கும் ஒல்லி நடிகர் தான் காரணமா?

சென்னை: திருமணம் வேண்டாம் என பிரபல நடிகை மறுத்ததற்கு பின்னால் ஒல்லி நடிகரின் பெயர் அடிப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஏகப்பட்ட நடிகைகளுடன் ஒல்லி நடிகருக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை புதிதாக கிளம்பி இருக்கிறது.

பக்கத்து ஸ்டேட் பக்கம் அந்த நடிகரின் கவனம் திடீரென திசை திரும்பவும் அதுதான் காரணம் என்கின்றனர்.

நடிப்பில் கில்லி

நடிப்பில் கில்லி

நடிப்பில் கில்லியாக செயல்பட்டு வரும் அந்த ஒல்லி நடிகர் பெண்கள் விஷயத்தில் பல்லி போல ஒட்டிக் கொள்கிறாராம். ஏகப்பட்ட நடிகைகளுடன் அந்த ஒல்லி நடிகருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே வருகிறது. நட்பு ரீதியாகவே அவர் பழகி வருவதாகவும் கூறுகின்றனர்.

திருமணம் வேண்டாம்

திருமணம் வேண்டாம்

ஆடம்பரமாக திருமண ஏற்பாடு எல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில் திடீரென பிரபல நடிகை தனக்கு இப்போ திருமணம் வேண்டாம் என்று அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மாப்பிள்ளை வீட்டாரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

அவர் தான் காரணமா

அவர் தான் காரணமா

இந்நிலையில், பிரபல நடிகை திருமணத்தை நிறுத்தியதற்கு பின்னால் ஒல்லி நடிகர் தான் இருக்கிறார் என புதுக் கதை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருவரும் இணைந்து ஏற்கனவே நடித்துள்ள நிலையில், இப்படி கிளப்பி வருகின்றனரா அல்லது என்னதான் உண்மை என்று தெரியவில்லை.

நிறைய நடிக்கணும்

நிறைய நடிக்கணும்

இவ்வளவு சின்ன வயதில் ஏன் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகப் பார்க்குறீங்க உங்களோட இணைந்து இன்னமும் சில படங்களில் நடிக்கலாம்னு நினைச்சேனே என அந்த நடிகர் சொன்னதற்கு பிறகு தான் திடீரென தனது சினிமா கனவை நினைத்துப் பார்த்து திருமணத்தை ரத்து பண்ணி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஒத்துக் கொள்ளவில்லை

ஒத்துக் கொள்ளவில்லை

திருமணத்திற்கு பிறகு இதே போல் நான் நடிப்பேன் என நடிகை மாப்பிள்ளையிடம் வைத்த கோரிக்கைக்கு மாப்பிள்ளை வீட்டாரும் அனுமதி கொடுக்க வில்லையாம். உடனடியாக இனிமேல் உங்களுடன் எந்தவொரு உறவும் இல்லை என நடிகை திருமணத்தை கேன்சல் செய்துள்ளார்.

அந்த பக்கம் கவனம்

அந்த பக்கம் கவனம்

ஒல்லி நடிகரும் தொடர்ந்து தற்போது பக்கத்து ஸ்டேட் பக்கம் தனது கவனத்தை திசை திருப்பி இருக்கிறார். அவர் அடுத்தடுத்து நடிக்கும் படத்தில் அந்த நாயகி கமீட் செய்யப்பட்டால் இது குறித்த உண்மை வெளியாகும் என சமூக வலைதள கோடாங்கிகள் கிசுகிசுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X