மலையாள நடிகை தான் வேண்டுமாம்.. முரண்டு பிடிக்கும் ஒல்லி நடிகர்.. ஓஹோ அதுதான் மேட்டரா?

By Staff

சென்னை: அந்த ஒல்லி நடிகருக்கு தனது படங்களில் ஹீரோயினாக நடிக்க மலையாள நடிகைகள் தான் வேண்டும் என முரண்டு பிடித்து வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன. பொதுவாகவே ஹீரோக்கள் தமிழ் நடிகைகளை அதிகம் தவிர்த்து வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் இருந்து தான் நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி ஆகி வருகின்றனர்.

கேரளாவை விட்டால், பாலிவுட்டில் இருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நடிக்கத் தெரிந்த நடிகைகள் பலர் இருந்தாலும், இப்படி ஹீரோக்கள் விரும்பி இறக்குமதி செய்ய பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

gossip kollywood actress gossip

சமீப காலமாக தனது படங்களில் அதிகளவில் மலையாள நடிகைகளையே ஒல்லி நடிகர் களமிறக்கி வர இப்படியொரு விஷயம் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒல்லி நடிகரின் வளர்ச்சி: இயக்குநராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள அந்த ஒல்லி நடிகரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை சரியாக புரிந்துக் கொண்ட நடிகர் தனக்கு வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு முழு நேர ஹீரோவாகி விட வேண்டும் என்கிற முடிவுக்கே வந்து விட்டார் என்கின்றனர்.

டைரக்டர்கள் வெயிட்டிங்: ஒல்லி நடிகர் இனிமேல் படங்களை இயக்கி ஏன் தலைவலியை தலையில் சுமந்துக் கொண்டு திரிய வேண்டும் என்கிற முடிவுக்கே வந்துவிட்டாராம். அதற்கு காரணமே இவர் கிடைத்தாலே போதும் என பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் வெயிட்டிங்கில் காத்திருப்பதை இந்த ஒல்லி நடிகர் புரிந்துக் கொண்டது தான் காரணம் என்கின்றனர்.

மலையாள நடிகைகள் தான் வேண்டும்: தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில இளம் நடிகைகளை குறைவான சம்பளத்துக்கு கூட ஒல்லி நடிகருக்கு ஜோடியாக போடலாம் என படக்குழு நினைத்தாலும், நடிகர் உறுதியாக மலையாள நடிகைகள் தான் வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம். அதற்கு குறிப்பிட்ட ஒரு காரணமும் உள்ளது என்கின்றனர்.

அப்பா வரமாட்டாரு: மலையாள நடிகைகள் நல்லா நடிப்பதன் காரணமாக அவர்களை வேண்டும் என்று ஒல்லி நடிகர் சொல்லவில்லையாம். பொதுவாக மலையாள நடிகைகள் டிராவல் செய்துக் கொண்டு வந்தால் அவர்களுடன் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என குடும்பத்தில் இருந்து யாரும் துணைக்கு வரமாட்டார்கள் என்றும் முக்கியமாக அப்பா கூட வரமாட்டார் என்றும் அப்போது தான் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது அவர் ஒரு மாதிரியாக பார்க்க மாட்டார். நமக்கு நடிக்க வசதியாக இருக்கும் என்பதால் இப்படியொரு ரூட்டை ஒல்லி நடிகர் ஃபாலோ செய்து வருவதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டு நடிகைகள் பலர் தங்கள் அப்பாக்களுடன் பாதுகாப்பாக ஷூட்டிங்கிற்கு வருவதாலே பலர் அவர்களை ஒதுக்குவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X