சம்பாதிக்க வேற வழியே தெரியல.. சண்டை போட்ட சேனலிடமே சரண்டர் ஆன ஒல்லி நடிகை!
சென்னை: சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 150 கூட தராமல் ஏமாற்றியதாக அந்த ஒல்லி நடிகை பற்றி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது இன்னொரு பேச்சு வைரலாக அடிபட்டு வருகிறது.
அந்த சேனலில் ஆரம்பமான அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஒல்லி நடிகை.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், தொலைக்காட்சி கொடுத்த டார்ச்சர்கள் குறித்து ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

பிரபலமாக்கிய பெரிய ஷோ
சினிமா படங்களை விட அந்த ஒல்லி நடிகையை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியதே அந்த பெரிய ரியாலிட்டி ஷோ தான். அந்த வீட்டில் நடிகை போட்ட ஆட்டத்தையும் சிரிப்பையும் பார்த்த ரசிகர்கள் தலைவி ரேஞ்சுக்கு அவரை தலையில் தூக்கி வைத்து ஆடினர்.

மனநல பாதிப்பு
தொகுப்பாளர் மற்றும் மற்ற பிரபலங்களை விட நடிகைக்கு கூடுதல் மவுசு ரசிகர்கள் மத்தியில் எகிறியதை அறிந்த அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் நடிகைக்கு மனநலம் பாதித்து விட்டதாக கூறி அதிரடியாக அந்த நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்றினர்.

டார்ச்சர் கொடுத்தாங்க
அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரே நாம தான்னு நினைச்சிட்டு இருந்தப்போ அந்த நடிகை வெளியேறியது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கியது. உடனடியாக அந்த சேனல் தனக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் எந்த அளவுக்கு டார்ச்சர் கொடுத்தனர் என்பதை விளாவரியாக பல ட்வீட்களை போட்டு நேரடியாக மோதலில் இறங்கினார்.

ஒரே சண்டை
அந்த டிவியின் பித்தலாட்டங்கள் இவை எல்லாம் என்றும் உள்ளே நடக்கும் பல மோசடிகளையும் அம்பலப்படுத்தப் போகிறேன் என்றும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்ட நடிகைக்கும் அந்த சேனலுக்கும் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த நடிகையை எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைப்பதை அந்த சேனல் தவிர்த்து வந்தது.

நிலைமை மோசம்
ரசிகர்கள் மத்தியில் கிடைத்த புகழை வைத்துக் கொண்டே சினிமாவில் பெரிதாக சாதித்து விடலாம் என நினைத்த அந்த நடிகை அந்த சேனலை பயங்கரமாக பகைத்துக் கொண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல பெரிய படங்கள் சில கிடைத்தாலும் வெற்றி கிடைக்காமல் நிலைமை ரொம்பவே மோசமானது.

சரண்டர்
சர்ச்சைகளுக்கும் சண்டைகளூக்கும் பஞ்சமே இல்லாத அந்த சேனலில் மீண்டும் போய் பேசி பாருங்க.. உங்க நிலைமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வரும் என எந்த ஜோசியக்காரர் சொன்னாருன்னு தெரியல மறுபடியும் அந்த சேனலிடமே அந்த ஒல்லி நடிகை சரண்டர் ஆகி விட்டாராம். பல புதிய ஷோக்களிலும் நடித்து சம்பாதிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











