அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்த இயக்குநர்.. நம்பர் நடிகை மீதான ஆசையால்.. சோலி முடிஞ்சிடும் போல!
சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் அந்த ஒல்லி இயக்குநர் அடுத்த படத்தை ஒரு வருடத்துக்கும் மேல் ஆரம்பிக்காமல் காலத்தை வீணடித்து வரக் காரணமே நம்பர் நடிகை மீதான ஆசை தான் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
வித்தியாசமாக இளைஞர்களை கவரும் விதத்தில் படங்களை கொடுத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஏகப்பட்ட ரசிகர்களை பிடித்து விட்டார் அந்த ஒல்லி இயக்குநர்.

இயக்கத்தை தாண்டி நடிப்பிலும் தன்னால் அசத்த முடியும் என்பதை நிரூபித்த அவர் தற்போது தனது ரூட்டையே விட்டு விட்டு வேறு ஒரு டிராக்கில் சென்று விட்டார் என புலம்பல்கள் கிளம்பி உள்ளன.
தொட்டதெல்லாம் தூள்: முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த அந்த இயக்குநர் அடுத்து செம கான்ஃபிடன்ஸ் உடன் நடிகராக மாறிய நிலையிலும், அந்த படத்தையும் சூப்பர் ஹிட் அடித்து தனக்கான ஒரு இடத்தையும் ஏகப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
அடுத்து அந்த இயக்குநர் எந்த படத்தை இயக்கப் போகிறார் என ரசிகர்கள் ஒரு வருட காலம் காத்திருந்த நிலையிலும், இன்னமும் செல்ஃப் எடுக்காமல் அப்படியே அமைதியாக கிடக்க காரணமே நம்பர் நடிகை தான் என புதிய குண்டை தூக்கிப் போட்டுள்ளனர்.
நம்பர் நடிகை தான் வேண்டும்: நம்பர் நடிகையின் கணவருடன் ஜோடி போட்டு சுத்த ஆரம்பித்த அந்த ஒல்லி இயக்குநர் நடித்தால் அடுத்து நம்பர் நடிகையுடன் தான் நடிக்க வேண்டும் என்கிற முடிவுடன் உள்ளார் என்கின்றனர்.
அதன் காரணமாகத்தான் அடுத்த படத்தை அவர் இன்னமும் ஆரம்பிக்காமல் காத்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சு நிலவி வருகிறது.
இன்னும் ஒரு வருஷம் ஆகும்: டாப் நடிகர் துரத்தி விட்ட நிலையில், வெறித்தனமாக ஒரு சூப்பர் படத்தை இயக்குநர் கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், இருவரும் ஜோடி போட்டுக் கொண்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க என்றும் இன்னும் ஒரு வருஷம் ஆகிவிடும் நம்பர் நடிகை ஃப்ரீயாக என்பதால் அதன் பின்னர் தான் இருவரும் இணைந்து புதிய படத்தை ஆரம்பிப்பார்கள் என்றும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











