»   »  'கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உண்மைதான்'... புலம்பும் இசையமைப்பாளர்

'கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உண்மைதான்'... புலம்பும் இசையமைப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உண்மைதான் என ஒல்லி இசையமைப்பாளர் புலம்பி வருகிறாராம்.

ஒல்லி நடிகரின் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அந்த இசையமைப்பாளர் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை எட்டினார்.

இதனால் ஒல்லி நடிகர் படம் தவிர முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.

குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த இசையமைப்பாளருக்கு மழை நேரத்தில் வெளியான பாடல் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

இதனால் பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவரிடமிருந்து கைநழுவிப்போனது. முக்கியமாக இவருக்கும், ஒல்லி நடிகருக்கும் இடையிலான உறவில் நிரந்தரமாக விரிசலே விழுந்து விட்டது.

இந்த விஷயத்தில் இசையமைப்பாளர் ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம். சமீபகாலமாக கூடா நட்பு கேடாய் தான் முடியும்.

ஒரே ஒரு பாடலால் நல்ல படங்கள், நல்ல நண்பர்கள் என இரண்டையுமே இழந்து விட்டேன் என்று நெருக்கமானவர்களிடம் இசையமைப்பாளர் புலம்பி வருவதாகக் கூறுகின்றனர்.

ஒல்லியின் புலம்பலைக் கேள்விப்படுவோர் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று கிண்டலடித்து வருகின்றனராம்.

English summary
'Worst Friendship end with Perversity' Leading Music Composer Lamenting Now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil