கால் அழகிக்கு கிடைத்த வாய்ப்பு.. உச்சகட்ட வயித்தெரிச்சலில் பேபி நடிகை.. மீண்டும் முட்டிக்கிச்சாம்!

By Staff

சென்னை: மாஸ் நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பேபி நடிகைக்கு கிடைக்க விடாமல் இடையே உள்ளே புகுந்து கேம் ஆடியதே அந்த கால் அழகி தான் என்கிற பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் ஹெவியாக அடிக்கத் தொடங்கி உள்ளன.

பேபி நடிகை ரொம்பவே திமிர் காட்டி வருகிறார் என்றும் அதிக சம்பளம் கேட்கிறார், அவரை வைத்து படம் எடுத்தால் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகும் என்றெல்லாம் கோலிவுட் வட்டாரத்தில் சிலர் வதந்திகளை கிளப்பி விட்ட நிலையில் தான் அந்த வாய்ப்பு அப்படியே கால் அழகிக்கு சென்றிருப்பதாகவும் பேபி நடிகைக்கு வாய்ப்பை கிடைக்க விடாமல் செய்ததிலும் கால் அழகிக்கு பங்கு இருப்பதாக திடுக்கிட வைக்கின்றனர்.

gossip kollywood actress gossip

ஏற்கனவே பேபி நடிகைக்கும் கால் அழகிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. டோலிவுட்டில் பல படங்களை பேபி நடிகையிடம் இருந்து தட்டிப் பறித்ததே கால் அழகி தானாம்.

மாஸ் நடிகர் படம்: கடந்த சில ஆண்டுகளாகவே எப்படியாவது மாஸ் நடிகர் படத்தில் நடித்து மீண்டும் கோலிவுட்டில் தனது கொடியை நாட்டி விடலாம் என்கிற பகல் கனவுடன் பேபி நடிகை முயற்சி செய்து வருகிறாராம். ஆனால், திருமணமாகி விட்டாலே அந்த நடிகைகளுடன் இணைந்து நெருக்கமாக நடிக்க முடியாத சூழல் இருப்பதால் மாஸ் நடிகர் அந்த நடிகையை தொடர்ந்து அவாய்ட் செய்து வந்தார் என்றும் கூறுகின்றனர். ஆனால், இந்த முறை எப்படியாவது மாஸ் நடிகர் படத்தின் வாய்ப்பை பெற்று விடலாம் என பேபி நடிகை முயற்சி செய்து வந்த நிலையில், அவருக்கு பூனை போல குறுக்கே வந்து வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டார் அந்த கால் அழகி.

பெரிய கனெக்‌ஷன்: சினிமா வட்டாரத்தில் சமீப காலமாக பல பெரிய நடிகர்களின் படங்களில் கால் அழகி கமிட்டாக காரணமே அவருக்கு இருக்கும் பெரிய கனெக்‌ஷன் தான் என்கின்றனர். பல காஸ்டிங் இயக்குநர்களுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறாராம் அந்த கால் அழகி. கடைசி நேரத்தில் இந்த முறையும் அந்த நடிகர் படத்தை பிடித்தாக வேண்டும் என நடிகை எடுத்த முயற்சிகளால் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறுகின்றனர்.

வயித்தெரிச்சலில் பேபி நடிகை: ஏற்கனவே பேபி நடிகையை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், சினிமாவிலாவது உச்ச நட்சத்திரமாக வலம் வர வேண்டும் என்கிற வெறியில் பட வாய்ப்புகளை கைப்பற்ற அவர் எடுக்கும் முயற்சிக்கெல்லாம் கால் அழகி தொடர்ந்து கட்டையை போட்டு வரும் நிலையில், பேபி நடிகை செம கடுப்பாகி இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X