வீட்டிலேயே சரக்கு, சிகரெட்.. அதில் குறைந்த நாட்டம்.. நடிகையை லெஜண்ட்ரி இயக்குநர் பிரிய காரணம் இதுதானாம்

By Staff

சென்னை: லெஜெண்ட்ரி இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் தனது மனைவியை பிரிந்ததற்கான காரணம் குறித்து கிசுகிசுக்கப்பட்டுவருகிறது.

தன்னுடைய குடும்பம் ரொம்பவே கஷ்டத்தில் இருந்தபோது இளமையிலேயே இயக்குவதற்கு வந்தவர் அவர். அந்தப் படத்தில் கிளாமரான காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும். அந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் இயக்கிய லவ் பெயரில் ஆரம்பிக்கும் படம் பெரும் ஹிட்டடித்தது. இதன் காரணமாக அந்த குடும்பமும் தப்பித்தது அவரும் தப்பித்தார். இயக்குநருக்கு சிறந்த இயக்குநர் என்ற பெயரும் கிடைத்தது.

Legendary director is rumored to have split up with his wife this is the hot gossip now

லெஜெண்ட்ரி இயக்குநர்: லவ் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஏரியா படம் பட்டித்தொட்டியெங்கும் கலக்கியது. தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் வேறு வேறு கதைக்களங்களை தொட்டு ராவாக பேச வந்த விஷயத்தை பேசியதால் இளமை இயக்குநர் லெஜெண்ட்ரி இயக்குநர் என்ற இடத்துக்கு நகர்ந்தார். அவரது இயக்கத்தில் நடித்தால் போதும் அதை ஒரு சாதனையாகவே கருதிக்கொள்ளலாம் என்று சீனியர் நடிகர்கள் முதல் ஜூனியர் நடிகர்கள்வரை நினைத்தனர்.

திருமணம்: இப்படிப்பட்ட சூழலில் லவ் படத்தை இயக்கியபோது படத்தின் நாயகிக்கும் இயக்குநருக்கும் லவ் பற்றிக்கொண்டது. இந்த செய்தி வெளியில் தெரிய ஆரம்பித்தவுடன் இப்படிப்பட்ட இயக்குநருக்கு இப்படி ஒரு மனைவியா என்று பலரும் பேசினர். ஏனெனில் இயக்குநர் கொஞ்சம் அப்படிப்பட்டவர் என்ற டாக் ஒன்று ரொம்ப காலமாகவே ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை இயக்குநரை திருமணம் செய்துகொண்டார்.

ஆரம்பித்த பஞ்சாயத்து: சூழல் இப்படி இருக்க வாரிசு நடிகரை வைத்து அவர் இயக்கிய படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவருடன் ஓவர் நெருக்கத்தை இயக்குநர் காட்டுகிறார் என்று பலரும் பேச ஆரம்பித்தனர். மேலும் இந்த விவகாரம் நடிகைக்கு தெரிந்து தன் கணவருடன் நெருக்கம் காட்டியவரிடம் சண்டைக்கு போன கதையும் நடந்ததாம். அந்த கதாநாயகி யார் என்றால் ஏற்கனவே தன்னுடன் 6 வயது இளையவரை காதலித்து பிறகு பிரேக் அப் செய்துகொண்டவர்.

விவாகரத்து: இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க நடிகையை நடிக்கக்கூடாது என இயக்குநரின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினார்களாம். அதற்கு நடிகையோ முடியாது என பிடிவாதம் பிடித்தாராம். முக்கியமாக தனது காதல் கணவர் தனக்கு சப்போர்ட் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த நடிகைக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்கள் சொல்வதையே வழிமொழிந்தாராம் இயக்குநர். அதனால் பொறுக்காத நடிகை விவாகரத்து பெற்றுவிட்டார்.

அதுமட்டும் காரணமில்லை: இந்தச் சூழலில் நடிகைக்கும் இயக்குநருக்குமான விவகாரத்துக்கு அது மட்டும் காரணம் இல்லையாம். அதற்குள் வேறு சில விஷயங்களும் இருக்கின்றனவாம். அதாவது நடிகைக்கு குடி பழக்கமும், சிகரெட் பழக்கமும் அளவுக்கு அதிகமாகவே இருந்ததாம். ஷூட்டிங் ஸ்பாட்டில்கூட சிகரெட்டும் கையுமாகத்தான் அம்மணி இருப்பாராம். திருமணத்துக்கு பிறகு நடிப்பதற்கு வீட்டில் ரெட் கார்டு போடப்பட்டதால் வீட்டுக்குள் உட்கார்ந்தே சதா சிகரெட்டும், சரக்குமாக இருந்தாராம்.

நடிக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டதால் வேண்டுமென்றே அந்த பழக்கங்களை தொடர்ந்து வீட்டுக்குள் செய்துவந்தாராம். முக்கியமாக கணவருடன் நெருங்குவதையே தவிர்த்துவிட்டாராம். வீட்டில் போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டால்தான் அந்த விஷயத்துக்கு தான் போட்டிருக்கும் ரெட் கார்டை நீக்குவது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறாராம்.

வீடும் விட்டுக்கொடுக்காமல், நடிகையும் விட்டுக்கொடுக்காமல் இந்த பிரச்னை இருமுனை கத்தியாக இருந்திருக்கிறது. அதனால் இனியும் இது ஒத்துவராது என்று முடிவெடுத்துதான் இயக்குநர் விவாகரத்து என்ற நிலைக்கு வந்தாராம். இந்த விஷயம்தான் இப்போது கோலிவுட்டில் ஹாட் கிசுகிசுவாக ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X