பெண் இயக்குநர் தொல்லை ஓவர் ஆகிடுச்சாம்.. அடுத்ததாக இசையமைப்பாளரும் எஸ்கேப் ஆக போகிறாரா?

By Staff

சென்னை: உச்ச நடிகரின் மகள் இயக்குநர் ஆனதில் இருந்தே ஷூட்டிங் ஸ்பாட்டே கதி கலங்கி போயுள்ளதாக கூறுகின்றனர்.

யாரையுமே மதித்து பேசாமல், தான் ஒரு பெரிய இயக்குநர் என்கிற மமதையில் செயல்பட்டு வருகிறார் அந்த பெண் இயக்குநர் என பெரும் பேச்சுக்கள் கோலிவுட்டில் உலா வருகின்றன.

இயக்குநரின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஹீரோ ஒருவரே வெளியேறி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அடுத்ததாக இசையமைப்பாளரும் எஸ்கேப் ஆக திட்டமிட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

ஓவர் ஆட்டிட்யூட்

ஓவர் ஆட்டிட்யூட்

உச்ச நடிகரின் மகள் என்பதால் அதனை பயன்படுத்தி ஓவர் ஆட்டிட்யூட் காட்டிய நிலையில் தான் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார் அந்த பிரபல பெண் இயக்குநர் என கோடம்பாக்கம் முழுவதும் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது. படப்பிடிப்பு தளமும் தொடர்ந்து போர்க்கள பூமியாகவே மாற்றி வைத்து இருக்கிறார் அந்த பெண் இயக்குநர் என பலரும் விளாசி வருகின்றனர்.

மகன்களை அனுப்பவில்லை

மகன்களை அனுப்பவில்லை

சமீபத்தில் கணவர் ஆசையாக கட்டிய அந்த பிரம்மாண்ட வீட்டின் விசேஷத்தில் கலந்து கொள்ள மகன்களை அனுப்பவே இல்லையாம். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சென்று வந்த மகன்கள் ரொம்பவே அப்பாவின் வீட்டை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், அம்மாவின் ஆர்டர் குழந்தைகளை அப்செட் ஆக்கி உள்ளதாம்.

ஹீரோ அவுட்

ஹீரோ அவுட்

பெண் இயக்குநரின் அதிக பிரசங்கித்தனம் காரணமாக தொடர்ந்து பெரிய படமாக இருந்தாலும், பெரிய நடிகர் இணைந்துள்ள படமாக இருந்தாலும் வேண்டாம். நமக்கு நம்ம மானம் மரியாதை தான் முக்கியம் என கடைசி நேரத்தில் கமிட்டான அந்த ஹீரோ படத்தில் இருந்தே அவுட் ஆகிவிட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இன்னொரு நடிகர் தத்தளிப்பு

இன்னொரு நடிகர் தத்தளிப்பு

நீண்ட நாட்கள் கழித்து இப்படியொரு பெரிய பட வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், அந்த படத்தில் நடித்து வரும் இன்னொரு நடிகர் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு படத்தில் நடித்து வருவதாக கூறுகின்றனர். அவருக்கும் படத்தில் இருந்து வெளியேறும் மனநிலை ஏற்பட்டதாகவும் எந்த முடிவை எடுப்பதென்றே தெரியாமல் தத்தளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இசையமைப்பாளர் எஸ்கேப் ஆகிறாரா

இசையமைப்பாளர் எஸ்கேப் ஆகிறாரா

சரியான கதையையோ காட்சிகளையோ கொடுக்காமல், இஷ்டத்துக்கு சூப்பர் ஹிட் மியூசிக் வேண்டும் என அவரிடம் அன்பு தொல்லை கொடுத்து வருகிறாராம் அந்த பெண் இயக்குநர். அன்பு தொல்லை சில நேரங்களில் எல்லை மீறி செல்வதால், இசையமைப்பாளரும் நைஸாக எஸ்கேப் ஆகி விடலாமா என்றே யோசித்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த ஒரு மனுஷனுக்காக

அந்த ஒரு மனுஷனுக்காக

ஆனால், உச்ச நடிகரின் முகத்துக்காக இந்த படத்தில் கமிட் ஆகி விட்ட நிலையில், நாம் வெளியேறினால் நல்லா இருக்காது என நினைத்து பல்லை கடித்துக் கொண்டு பணியாற்றி வருகிறார் இசையமைப்பாளர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் இந்த படத்தின் பணிகளை முடித்து விட்டு அடுத்த படத்திற்கு செல்லவே இசையமைப்பாளர் யோசித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X