தீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை!
தீபகரமான பெயர் கொண்ட அந்த நடிகைக்கு கிடைக்க விருந்த உச்ச நட்சத்திர நடிகரின் பட வாய்ப்பை அசுர நடிகை தட்டிப் பறித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Recommended Video
சென்னை: விஸ்வாசமான இயக்குநர் படத்தில் நடிக்கும் உச்ச நட்சத்திர நடிகருக்கு நாயகிகள் தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது. தீபகரமான பெயர் கொண்ட நடிகை மற்றும் சாவித்ரி நடிகை என இரு நடிகைகளை ஜோடியாக்க விஸ்வாசமான இயக்குநர் முடிவு செய்து வைத்திருந்த நிலையில், அசுர நடிகையின் வருகையால் தனது முடிவை மாற்றியுள்ளாராம்.

ரீமேக் ரீஎன்ட்ரி
2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான வயது குறித்த அசுர நடிகையின் படத்தை 2015ம் ரீமேக் செய்து ரீஎன்ட்ரி கொடுத்தார் அந்த தீபகரமான நடிகை. ஆனால், தமிழில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து வரிசை கட்டி பல படங்களில் நடித்து வந்தாலும் எந்த படமும் அந்த நடிகைக்கு திருப்திகரமான வெற்றியை இதுவரை கொடுக்கவில்லை.

கண்டுகொள்ளாத கணவன்
ஆரம்ப காலத்தில் மனைவியுடன் நடித்த படங்களின் மூலம் வெற்றி வாகை சூடிவந்த அந்த பிரகாஷ நடிகர், தற்போது மனைவி சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தாலும், அவருடன் நடிக்க விருப்பம் தெரிவிக்காமல் தவிர்த்து வருகிறார்.

பெரிய வாய்ப்பு
பேராசிரியர் படமும், அதிர்ஷ்ட படமும் ஓரளவுக்கு அந்த தீபகரமான நடிகைக்கு வரவேற்பு கொடுத்த நிலையில், உச்ச நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மிகப் பெரிய வாய்ப்பு வீட்டு வாசல் கதவை தட்டியது. சாவித்ரி நடிகை இருந்தாலும், சந்திர படத்தை தொடர்ந்து மீண்டும் உச்ச நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த குஷியில் தீபகரமான நடிகை இருந்து வந்தார்.

அசுர நடிகை வைத்த ஆப்பு
சமீபத்தில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கல்லா கட்டி வரும் அந்த படத்தின் மாபெரும் வெற்றியால், அசுர நடிகையின் பக்கம் விஸ்வாசமான இயக்குநரின் பார்வை திரும்பியுள்ளதாம். இதனால், தீபகரமான நடிகைக்கு வழங்கப்பட இருந்த வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











