உச்ச நடிகர் படத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஒளிமயமான நடிகை.. காரணம் என்ன தெரியுமா?

Recommended Video

உச்ச நடிகர் படத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஒளிமையமான நடிகை

சென்னை: உச்ச நடிகரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக அந்த ஒளிமயமான நடிகை ஜோடி சேர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தில் அவருக்கு பதிலாக அசுர நடிகையை நடிக்க வைக்கலாம் என மருமகன் தரப்பில் இருந்து அழுத்தம் வந்து கொண்டிருப்பதை அறிந்த உச்ச நடிகர், இருவரும் வேண்டாம் வேற ஆளை பாருங்க என இயக்குநருக்கு ஒரே அடியாக கட்டளை போட்டு விட்டாராம்.

அதன் காரணத்தால், தான் அந்த மருமகன் சமீபத்தில் வெளியான அந்த ஐயப்பா பாட்டுக்கு கூட ஒரு வார்த்தை கூட பாராட்டி பேசவில்லையாம்.

ஒளிமயமான நடிகை

ஒளிமயமான நடிகை

ஓவர் ஆக்டிங் என கூறப்பட்டாலும், தான் நடிக்கும் படங்களை வெற்றி படங்களாக மாற்றும் திறன் கொண்டவர் அந்த ஒளிமயமான நடிகை. திருமணத்திற்கு பிறகு, சினிமாவுக்கு சிறிது இடைவேளை விட்ட அந்த நடிகை, புருஷன் மட்டும் நடிக்கிறாரு, நானும் ஏன் நடிக்கக் கூடாது என மறுபடியும் சில கன்டிஷன்களோடு நடிக்க அனுமதி பெற்று நடித்து வருகிறாராம்.

இப்படி ஆயிட்டாரே

இப்படி ஆயிட்டாரே

ஒளிமயமான அந்த நடிகை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். படங்கள் ஓடுதோ, ஓடவில்லையோ அதை பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்வதே இல்லையாம். அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் மட்டுமே அவர் கண்களுக்கு தெரிவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

உச்ச நடிகரின் அடுத்த படத்தில் அவருடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்ட சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்த அந்த ஒளிமயமான நடிகைக்கு, மருமகன் நடிகரால் வந்த திடீர் தொல்லையால், கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என புலம்பி வருகிறார்.

நான்வெஜ் நடிகை

நான்வெஜ் நடிகை

வி பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஒளிமயமான நடிகை மற்றும் அசுர நடிகை வேண்டாம் என அந்த உச்ச நடிகர் தடாலடியாக தடை போட்டுள்ள நிலையில், அடுத்ததாக, அந்த நடிகருடன் பல காலம் ஜோடி போட்டு நடித்த அந்த நான்வெஜ் நடிகைக்கு தூது விட்டுள்ளாராம் இயக்குநர்.

டபுள் சாய்ஸ்

டபுள் சாய்ஸ்

அந்த நான்வெஜ் நடிகை குடும்பத்தை காரணமாக காட்டி ஒருவேளை நடிக்கவில்லை என்றால், உடனடியாக அந்த பூ நடிகையை புக் செய்து விடவேண்டியது தான் என டபுள் சாய்ஸ் வைத்து முயற்சித்து வருகிறாராம் அந்த வி பட இயக்குநர்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

உச்ச நடிகரின் பிறந்த நாளன்று படபூஜையை போட்டு படத்தை தொடங்கலாம் என நினைத்து வருகிறார் அந்த வி பட இயக்குநர், ஆனால், பிறந்த நாளை முன்னிட்டு, பெரிய மலைக்கு ஒரு வேளை வழக்கம்போல் பிக்னிக் கிளம்பி விடுவாரோ அந்த ஸ்டார் நடிகர் என்ற கவலையில் படத்தை எப்படி துவங்குவது எப்படி முடிப்பது என பயங்கர குழப்பத்தில் இருக்கும் இயக்குநரை யார் தான் காப்பாற்ற போகிறார்களோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X