போதை மருந்து கும்பலுடன் நடிகை சுஹானி தொடர்பு?

குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகி நிலைக்கு உயர்ந்தவர் சுஹானி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ளார்.
சுஹானிக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் சமீபத்தில் போதை பொருள் வைத்திருந்ததாக கைதானார். அவரிடம் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியபோது சுஹானிக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து போலீஸ் பார்வை சுஹானி மேல் திரும்பியுள்ளது. அவரை கைது செய்ய ஆதாரங்கள் திரட்டி வருகிறார்கள்.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக ஓரிரு தினங்களில் சுஹானி கைதாவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
சுஹானிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. புகை பிடிக்கவும் செய்வாராம். இரவு விடுதிகளில் கொகைன் என்ற போதை பொருளை அவர் பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதனை சுஹானி பெற்றோர் மறுத்துள்ளனர். எனது மகள் அப்பாவி. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இல்லை என்று அவர்கள் கூறினர்.
அவரது போதைப் பழக்கத்தையும் மறுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











