லிப் லாக் வரை ஓகே.. அதுக்கு மேலையும் வேண்டாம்.. கீழயும் வேண்டாம்.. நடிகை போட்ட கறார் கண்டிஷன்

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்து, அதனை ரிலீஸ் செய்வதற்குள் படும் பாடு சொல்லி மாளாது. சம்பள உயர்வு, தயாரிப்பு செலவு, விநியோகஸ்தர்களின் கெடுபிடிகள் என ஏற்கனவே பலமுனை அழுத்தங்களில் சிக்கித் தவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு, தற்போது நடிகைகளின் புதுப்புது நிபந்தனைகளும் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளன.

ஒரு படம் ஓடினால் ஹீரோவும், இயக்குநரும் அடுத்தடுத்த படங்களுக்கு தாவி விடுகிறார்கள். ஆனால், நஷ்டம் ஏற்பட்டால் மொத்த சுமையையும் தாங்க வேண்டியிருப்பது தயாரிப்பாளர் மட்டும்தான். இப்படிப்பட்ட சூழலில், வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர் அண்மையில் விதித்துள்ள "கறார் கண்டிஷன்" கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நடிகை கண்டிஷன்: திரைக்கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் கமிட் ஆக அந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கதையைக் கேட்ட நடிகை, தனக்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் ஒரு வினோதமான நிபந்தனையை விதித்துள்ளார்.

Lip-Lock Is Fine But No Further Young Actress Sets Strict Conditions for Upcoming Film

லிப் லாக் ஓகே: "கதையின் தேவைக்காக 'லிப் லாக்' (முத்தக் காட்சி) வரை நடிக்க நான் ஓகே. ஆனால், கேமரா கோணம் அதற்கு மேலேயும் போகக் கூடாது, கீழேயும் வரக் கூடாது. முத்தக் காட்சியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கிளாமர் என்ற பெயரில் ஆடை விஷயத்திலோ, நெருக்கமான மற்ற காட்சிகளிலோ எல்லையைத் தாண்ட மாட்டேன்" என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

குதிரைக் கொம்பு: ஏற்கனவே படத்தின் வியாபாரம், சென்சார் கவலைகள் எனப் பல விஷயங்களில் தவித்து வரும் தயாரிப்பாளருக்கு, நடிகையின் இந்த திடீர் நிபந்தனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "முத்தக் காட்சிக்கு ஓகே சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு இவ்வளவு நிபந்தனைகளா?" என்று தயாரிப்புத் தரப்பு புலம்பி வருகிறதாம். கடன் சுமை, வட்டித் தொல்லைகளுக்கு நடுவே, நடிகைகளின் இதுபோன்ற கிடுக்கிப்பிடி கண்டிஷன்களும் சேர்ந்து கொள்வதால், தமிழ் சினிமாவில் படம் தயாரிப்பது என்பது நாளுக்கு நாள் குதிரைக் கொம்பாக மாறி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X