»   »  கத்தி இயக்குநருக்கு 'நோ' சொன்ன சின்னப்பூ நடிகை

கத்தி இயக்குநருக்கு 'நோ' சொன்ன சின்னப்பூ நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்தி இயக்குநரின் அடுத்தப்பட வாய்ப்பை சின்னப்பூ நடிகை நிராகரித்த செய்தி கோலிவுட்டில் தற்போது தீயாக பரவி வருகிறது.

அரண்மனை இயக்குநரின் புண்ணியத்தில் வெற்றி நடிகையாக வலம்வந்த சின்னப்பூ நடிகை, தற்போது தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறார்.

Little Flower Actress Reject Knife Director Movie

கடைசியாக வெளியான ராஜா உட்பட இந்த ஆண்டில் சின்னப்பூ நடிகையின் பெரும்பாலான படங்கள், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன.

இதனால் ஆடிப்போன நடிகை இனிமேல் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

இந்நிலையில் தமிழ், இந்தி, தெலுங்கு என்று மாறிமாறி முன்னணி ஹீரோக்களை இயக்கி வரும் கத்தி இயக்குநர், தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க நடிகையை அணுகினாராம்.

முழுக்கதையையும் கேட்ட நடிகை எனக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்று கூறி வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

இத்தனைக்கும் தெலுங்கில் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பாம். பல நடிகைகள் அந்த இயக்குநர் மற்றும் நடிகரின் படங்களில் நடிக்க காத்திருக்கின்றனர்.

இப்படியொரு சூழ்நிலையில் இரண்டு பேருக்கும் நடிகை நோ சொன்னது கோலிவுட் மட்டுமின்றி, டோலிவுட் வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமக்கு நடிப்புதான் முக்கியம்...

English summary
Sources Said Little Flower Actress Reject Knife Director Next Movie Opportunity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil