'இத அப்பவே செஞ்சிருக்கலாமோ'... காலம் கடந்து பீல் பண்ணும் பிரபல நடிகை!
மீண்டும் தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
சென்னை: அறிமுகமான புதிதிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு இந்த மலர் நடிகைக்கு கிடைத்தது. ஆனால், கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் நடிப்பிற்கு முக்கியத்துவம் தராமல், அவர் அழகிற்கே முக்கியத்துவம் தருவதாய் இருந்தது. இதனால் முன்னணி நடிகர்களுடன் நடித்த போதும், சொல்லிக் கொள்ளும்படியான திறமையான நடிகை என்ற பெயர் இவருக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையே காதல் வம்பில் சிக்கியது, வீடியோ ரிலீசானது என நடிகையின் பேர் ஏகத்திற்கும் டேமேஜ் ஆனது. இதனால், சில காலம் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.

இந்நிலையில், தற்போது தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை. எப்படியும் இப்படத்தின் மூலம் தனது பழைய மார்க்கெட்டைத் திரும்ப பிடித்தே தீருவது என தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
அதோடு, முன்பு நண்பர்களாக இருந்த முன்னணி நடிகர்கள் பலர் இப்போது அவரைக் கண்டு கொள்வது இல்லை. இதனால், தற்போது வளர்ந்து வரும் நடிகர்களுடனும் தானாகச் சென்று நட்பு பாராட்டி வருகிறார் நடிகை. கூடவே, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது போன்ற கதையுடன் வருபவர்களுக்கு சம்பளத்தை அதிரடியாக குறைத்துக் கொள்வதாகவும் ஆபர் அறிவித்துள்ளார்.
அறிமுகமான புதிதில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க மட்டுமே நடிகை அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதனால் பல வெற்றிப்பட வாய்ப்புகள் கை நழுவின. மீண்டும் அதே தப்பைச் செய்து விடாமல் இருக்கவும், புதிய பட வாய்ப்புகளைப் பெறவும் தான், இப்போது வளரும் நடிகர்களின் நட்பை வாண்டடாக வளர்த்து வருகிறாராம் நடிகை. இதை அப்போதே செய்திருந்தால், இடையில் நடிப்புக்கு பிரேக் விட்டிருக்க வேண்டி வந்திருக்காது என காலம் கடந்து பீல் பண்ணுகிறாராம்.


Click it and Unblock the Notifications











