For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விரட்டி விரட்டி துரத்துதே பிரச்னை.. அதுக்கு தீர்வு அர்ச்சனை.. ஒல்லி ஹீரோவுக்கு வந்த பரிகார ஆலோசனை!

    By
    |

    சென்னை: விரட்டி விரட்டி பிரச்னைகள் தொடர்வதால், அந்த ஹீரோவுக்கு பரிகார ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்.

    அந்த ஒல்லி ஹீரோ தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பவர். எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்.

    ஆனாலும் அவர் பற்றி ஏதாவது பரபரப்பு, அடிக்கடி பந்தி வைத்துக்கொண்டே இருக்கிறது சமீப காலமாக.

    சர்ச்சை விஷயங்கள்

    சர்ச்சை விஷயங்கள்

    ஒன்று முடிந்ததும் ஒன்று என இந்த சர்ச்சை விஷயங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஹீரோவுக்கு ஷூட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்செட். கடந்த மாதம் அவர் நடிக்கும் படத்தின் தலைப்புக்கு பஞ்சாயத்து வந்தது. அந்த டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று நடிப்பு திலக ரசிகர் மன்றமும் ஒரு இந்து அமைப்பும் கொடி பிடித்தன.

    மில்க் நடிகை விவாகரத்து

    மில்க் நடிகை விவாகரத்து

    சில நாட்களில் அது முடிந்து சகஜமாக வாழ்க்கைச் சென்று கொண்டிருந்த நிலையில், அந்த மில்க் நடிகையின் விவாகரத்து பிரச்னை வந்தது. நடிகையின் விவாகரத்துக்கு இந்த நடிகர்தான் காரணம் என, பிரபல தயாரிப்பாளரும் நடிகையின் முன்னாள் மாமனாரும் சொல்ல, விஷயம் பல மொழிகளிலும் ரீச்சாகி, நடிகருக்கு ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ். இதனால் அடுத்த அப்செட்.

    மூன்றாவது கண் டைட்டில்

    மூன்றாவது கண் டைட்டில்

    பிறகு சில நாட்கள் அமைதியாக இருந்த நடிகை, 'அதுக்கு அவர் காரணமல்ல, அவர் என் வெல்விஷராச்சே' என்று இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நடிகர் மூன்றாவது கண் டைட்டிலுக்கும் சர்ச்சை. இயக்குனர் ஒருவர் புகார் சொல்ல, அதற்கு தயாரிப்பு பதிலளிக்க என, தேவையில்லாத பிரச்னைகள் தேடி வந்து உட்கார்ந்துகொள்கிறது நடிகரைத் தேடி.

    சரியில்லை

    சரியில்லை

    இதனால் நடிகருக்கு வேண்டியர்கள் சிலர் ஆசோசனை சொல்லி இருக்கிறார்களாம். சமீப கால பஞ்சாயத்துகளுக்கு உங்கள் டைம் சரியில்லாததுதான் காரணம், அதனால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பிரபலம் ஒருவர் அவருக்கு அட்வைஸ் செய்ததாகச் சொல்கிறார்கள். இதைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட ஹீரோ, இன்னும் சில நாட்களில் சில கோயில்களுக்கு விசிட் அடிப்பார் என்கிறார்கள் ஹீரோவுக்கு வேண்டியவர்கள்.

    English summary
    In recent times, there are lot of problems rounds around the lean hero. so that the hero decided to go to some temples for special prayers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X