காமெடி படங்களுக்கு நோ.. எப்படியாவது முன்னுக்கு வர.. பிரியமான நடிகை அதிரடி திட்டம்?
சென்னை: ஆரம்பத்தில் இருந்தே நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் அந்த பிரியமான நடிகைக்கு முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பெற முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதாம்.
கடந்த ஆண்டு வெளியான அந்த அரசியல் படம் தனக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை கொடுக்கும் என எதிர்பார்த்த அவருக்கு வெறும் ஏக்கம் தான் மிஞ்சியுள்ளது.
அந்த வாரிசு நடிகரின் படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் புதுப்பட வாய்ப்புகள் இன்றி தவித்து புலம்பி வருகிறார் அந்த பிரியமான நடிகை.

நான் காமெடி ஹீரோயினா?
புதுப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும், காமெடி நடிகர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ஜோடியாகும் வாய்ப்பு அந்த பிரியமான நடிகைக்கு வருகிறது. இதனால், கடுப்பான அவர், நான் காமெடி ஹீரோயினா? ஏன் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவே நடிக்க கூப்பிடுறீங்க என சத்தம் போட்டுள்ளாராம்.

வந்த வாய்ப்பும் போனது
இதனால், அந்த முன்னணி காமெடி நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பும் அந்த பிரியமான நடிகைக்கு கிடைக்காமல் போயுள்ளது. அவசரப்பட்டு வாய்விட்டுட்டோமோ என்றும் தற்போது அந்த நடிகை தன்னையே திட்டிக் கொள்கிறாராம்.

அப்படி நடிச்சிருக்கக் கூடாது
ஆரம்பத்தில் இருந்தே இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்க வேண்டும், காமெடி நடிகர்கள் படங்களில் நடிக்க சம்மதித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என சிந்தித்து வரும் அந்த நடிகை, இனிமேல் காமெடி நடிகர்கள் படங்களில் நாயகியாக நடிக்கப் போவதில்லை என்ற புதுவருட உறுதிமொழியும் எடுத்துள்ளாராம்.

செகண்ட் ஹீரோயின்
அதே போல கெஸ்ட் ரோல் மற்றும் செகண்ட் ஹீரோயின் சப்ஜெக்ட்களிலும் இனிமேல் தான் நடிக்க மாட்டேன். அது போன்ற கதைகளை கொண்டு வந்தால், என்னிடம் வந்து பேசாதீர்கள் என தனது மேனேஜர் இடத்திலும் கறாராக கண்டித்துள்ளாராம் அந்த பிரியமான நடிகை.

முன்னணி நாயகி
கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரவில்லை என்றால் கூட முன்னணி நாயகிகள் வரிசையிலாவது தான் எப்படியாவது இடம்பிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் புது ரூட்டில் பயணம் செய்ய அந்த பிரபல நடிகை முடிவு செய்துள்ளார்.

இதெல்லாம் வேலைக்காகாது
முன்னணி காமெடி நடிகருக்கு ஜோடியாக இந்த ஹீரோயினை புக் செய்ய வந்த தயாரிப்பு தரப்பு இவர் போடுற கண்டிஷன் எல்லாம் வேலைக்காகாது என்றுக் கூறி, வேற ஒரு ஹீரோயினை தேட போய்விட்டார்களாம். பிரியமான நடிகையின் இந்த புதிய முடிவில் எத்தனை காலம் இருக்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











